உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4 தெரியவில்லை. எனினும், அக்காலப் பகுதியில் காம்போசத்தின் தென் பகுதியை மூன்றாம் ஹர்ஷவர்மனும், வட பகுதியை ஆறாம் ஜயவர்மனும் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர் என்பது காம்போச தேச வரலாற்றால் அறியப்படுகின்றது.' அவர்களுள் தென் பகுதியையாண்ட ஹர்ஷவர்மனே நம் குலோத் துங்கனுக்கு நண்பனாயிருத்தல் வேண்டு மென்பது உய்த்துணரக் கிடக்கின்றது. எனவே, குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் கடார தேசத்தைப் போல் காம்போச நாடும் சோழ இராச்சியத்தோடு நட்புரிமை கொண்டு வாணிகத் தொடர்புடையதாக இருந் திருத்தல் வேண்டுமென்பது திண்ணம்.

கன்னோசி நாட்டுத் தொடர்பு

3

குலோத்துங்கனது ஆட்சியின் 41ஆம் ஆண்டாகிய கி. பி. 1111-ல் வரையப்பட்ட கன்னோசி மன்னனது வடமொழிக் கல்வெட்டொன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் உளது.’ அது முற்றுப் பெறாமலிருத்தலால் அஃது அங்கு எழுதப் பெற்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கன்னோசி என்பது கன்னியா குப்ஜம் எனவும் கானோஜ் எனவும் வழங்கும் நாடாகும். அது காசிமாநகர்க்கு வடமேற்கே ஐக்கிய மாகாணத்திலுள்ள தொரு நாடு. குலோத்துங்கன் காலத்தில் அதனை ஆட்சி புரிந்தோர் மதனபால தேவனும், அவன் புதல்வன் கோவிந்த சந்திர தேவனுமாவர். அவ்விருவரில் ஒருவன், சோழர்களின் தலைநகரமாகிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு ஏதோ காரணம் பற்றி வர நேர்ந்தபோது அங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்கு நிவந்தம் அளித்து, அவ்வறச் செயலைக் கோயிலில் வரையும்படி செய்திருத்தல் வேண்டும். எக்காரணம் பற்றியோ அக்கல்வெட்டு முற்றிலும் வரையப்படாமல் நின்று விட்டது. அதில் கோயிலுக்களிக்கப் பெற்ற நிவந்தமும் அதனையளித்த அரசன் பெயரும் காணப்படவில்லை. ஆனால் உத்தரப்

4

1. Kamboja Desa by R. C. Majumdar M.A., pp. 120 and 121.

2. Ins. 29 of 1908.

3. Cunningham, Ancient Geography of India, pages 430 - 37. The Geographi- cal Dictionary of Ancient & Mediaeval India, p. 89.

4.Ep. Ind., Vol. IV, No. 11; M.E.R. for 1908, part II para 58.