உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

41

எனவே, குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியமும், கடார இராச்சியமும் நட்புரிமை பூண்டு வாணிகத் தொடர் புடையனவாய்ச் சிறப்புற்றிருந்தன என்று கூறலாம். இவ்வுண்மையைச் சுமத்ரா தீவில் கி.பி. 1088ஆம் ஆண்டு வரையப் பெற்றுள்ள 'திசையாயிரத்து ஐந்நூற்றுவர்" என்னுந் தமிழ் வணிகக் குழுவையுணர்த்துங் கல்வெட்டொன்று உறுதிப் படுத்தல் ஈண்டு அறியற்பாலதாகும்.

காம்போச நாட்டுத் தொடர்பு

குலோத்துங்கன் காம்போச நாட்டு வேந்தன் தனக்குக் காட்சிப் பொருளாகக் காட்டிய கல்லொன்றைப் பெற்று வந்து, தில்லைச் சிற்றம்பலத்தைச் சார்ந்துள்ள திருவெதிரம்பலத்தில் வைத்தனன் என்று சிதம்பரத்திலுள்ள கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.2 சயாம் தேசத்திற்குக் கிழக்கேயுள்ளதும் இக் காலத்தில் கம்போடியா என்று வழங்கப்பெற்று வருவதுமாகிய நாடே. முற்காலத்தில் காம்போசம் என்னும் பெயருடையதா யிருந்தது. அந்நாட்டு வேந்தன் காட்சிப் பொருளாகத் தனக்குக் காட்டிய அவ்வரிய கல்லை நம் குலோத்துங்கன் எவ்விடத்தில் பார்க்கும்படி நேர்ந்தது என்பது இப்போது புலப்படவில்லை. தன் அம்மான் வீர ராசேந்திர சோழன் விரும்பியவாறு கடார மன்னனுக்கு உதவி புரியவேண்டி, கி. பி. 1068-இல் இவன் பெரும் படையுடன் அந்நாட்டிற்குச் சென்றிருத்தல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. அவ்வாறு சென்றவன், தான் மேற்கொண்ட கருமம் முடிந்த பிறகு அந்நாட்டிற்கு அண்மையிலுள்ள காம்போசத்திற்கும் போயிருக்கலாம். அந்நாளில் அந்நாட்டரசன் காட்சிப்பொருளாகத் தனக்குக் காட்டிய கல்லை இவன் பெற்றிருத்தலும் இயல்பேயாம். இவன் அங்குச் சென்ற போது இவனை வரவேற்று உபசரித்து அவ்வரிய கல்லைக் காட்டிய காம்போச மன்னன் யாவன் என்பது தெளிவாகத் 1. The Colas, Vol. II, p. 30.

·

2. ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்குக் காம்போச ராஜன் காட்சியாகக் காட்டின கல்லு இது - உடையார் இராசேந்திர சோழ தேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பல முடையார் கோயிலில் முன் வைத்தது - இந்தக் கல்லு திருவெதிரம் பலத்துத் திருக்கல் சரத்தில் திருமுன் பத்திக்கு மேலைப் பத்தியிலே வைத்தது. (Ep. Ind., Vol. V, No. 13C)