உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 சென்ற தலைவர்களுள் நம் குலோத்துங்கனும் ஒருவனாக இருத்தல் வேண்டும்.1 இவன் அரசகுமாரனாக விருந்த காலத்தில் கி.பி. 1068இல் கடாரத்தில் பெற்ற அவ் வெற்றியையே ஆசிரியர் சயங்கொண்டார் தாம் பாடிய பரணியில் பாராட்டி யிருத்தல் வேண்டுமென்பது ஒருதலை. கி.பி. 1090ஆம் ஆண்டில் கடாரத்தரசன் இராசவித்தியாதா சாமந்தன் அபிமான துங்க சாமந்தன் என்னும் இரு தூதர்கள் மூலம் வேண்டிக் காண்டவாறு நாகப்பட்டினத்திலிருந்த இராசராசப் பெரும்பள்ளி, இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் இரண்டு புத்த விகாரங்கட்கும் நம் குலோத்துங்கன் தன் முன்னோருந் தானும் இறையிலியாக அளித்த ஊர்களைச் செப்பேடுகளில் வரைந்து வழங்கியிருப்பது' இவ்விரு வேந்தரும் அக்காலத்தில் உற்ற நண்பர்களாயிருந்தனர் என்பதை நன்கு புலப்படுத்துவதாகும். வீர ராசேந்திர சோழன் ஆணையின்படி குலோத்துங்கன் கடாரத்தை வென்று தனக்கு வழங்கிய காரணம் பற்றி அக்கடாரத்தரசன் சோழ மன்னர்க்குச் சில ஆண்டுகள் வரையில் கப்பஞ் செலுத்திக் கொண்டிருத்தலும் இயல்பேயாம். அன்றியும், குலோத்துங்கன் தனக்குச் செய்த பேருதவியை நினைவுகூர்தற்கறிகுறியாக இவன் பேரால் ராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் புத்த விகாரத்தைச் சோழகுல வல்லிப் பட்டினமாகிய நாகப்பட்டினத்தில் கடாரத் தரசன் புதிகாக அமைத்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.4 1. Sri Vijaya by Mr. K. A. Nilakanta Sastri, pp, 290 and 291.

3

இளமையில் குலோத்துங்கன், கடாரம், காம்போசம், சீனம் ஆகிய நாடுகளோடு கொண்டிருந்த தொடர்பையே இவன் மெய்க்கீர்த்தி தொடக்கத்தில் உணர்த்துகின்றது என்று திரு. மு.ஹ. நீலகண்ட சாஸ்திரி யாரவர்கள் கூறுவது பொருந்தாது. அருக்கனுதயத் தாசையி லிருக்கும் நிலமகள்' என்பது சோழ நாட்டையே குறிப்பதாக. சோணாட்டைக் குணபுலம் என்று சங்க நூல்கள் கூறுவது இதனை உறுதிப்படுத்துதல் காண்க. (சிறுபாணாற்றுப் படை வரிகள் 68 -83)

2. The Smaller Leiden Plates (Ep. Ind. Vol. XXII, No. 35)

3. குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தியில் காணப்படும் “வார்கடற் - றீவாந்தரத்துப் பூபாலர் நிறைவிடு - கலஞ்சொரி களிறு குறை நிற்ப என்ற பகுதி இவ் வுண்மையை வலியுறுத்தல் காண்க.

4. நாகப்பட்டினத்திற்குச் சோழ குல வல்லிப் பட்டினம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு என்பது லெய்டன் சிறு செப்பேடுகளால் அறியப்படுகின்றது. அவ் வூரிலிருந்த இராச ராசப்பெரும்பள்ளி முதல் இராசராச சோழன் காலத்தில் கடாரத்து அரசனால் எடுப்பிக்கப் பெற்றது. (Ibid, No. 34)