உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

47

பட்டுள்ளது. இங்ஙனம் நாடு முழுமையும் அளக்கப்பட்ட பிறகு வரி விதிக்கப் பெறாமல் நீக்கப்பெற்ற இடங்களை ஆராயுங் கால் அந்நாளில் விளை நிலங்களுக்கு மாத்திரம் அரசாங்கத்தினர் நிலவரி வாங்கி வந்தனரேயன்றி மற்ற நிலங்களுக்கு வரி வாங்கவில்லை என்பது நன்கு வெளியாகின்றது. அவ்வாறு அன்னோர் குடிகளிடமிருந்து வாங்கிய நிலவரியும் ஆறிலொரு கடமையே யாகும்.

குலோத்துங்கனது சமயநிலை

இவன் தன் முன்னோரைப் போலவே சைவ நெறியைச் சிறப்பாகக் கைக்கொண்டொழுகியவன்; சிவபெருமானிடத்தில் எல்லையற்ற பேரன் புடையவனாய்த் திகழ்ந்தவன். அக்காரணம் பற்றியே இவன் திருநீற்றுச் சோழன்' என வழங்கப் பெற்றனன் என்று தெரிகிறது. எனினும், தம் சமயமல்லாத மற்றைச் சமயங்களைச் சார்ந்த மக்களைத் துன்புறுத்தும் சில அரசர்கள் போல இவன் புறச்சமயத்தினர் பால் வெறுப்புக் காட்டியவன் அல்லன். சோழ நாட்டிலுள்ள புறச் சமயத்திலுள்ள பல வைணவ சமண பௌத்தக் கோயில்கள் தோறும் இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த மன்னார் குடியிலுள்ளதும் இப்போது இராசகோபாலசாமி என்று வழங்கப் பெறுவதுமாகிய திருமால் கோட்டம் இவன் ஆட்சிக் காலத்தில் எடுப்பிக்கப் பெற்று இவன் பெயரிடப்பட்ட தொன்றாம். குலோதுங்க சோழ விண்ணகரம்' என்பது அக்கோயிலின் பழைய பெயராகும். அன்றியும், வேங்கி நாட்டில் இவன் இளவரசுப் பட்டம் பெற்ற நாளில் அந்நாட்டின் ஒழுகலாற்றின்படி இவன் எய்திய அபிடேகப் பெயர் சப்தம விஷ்ணு வர்த்தனன் என்பது சில கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. கி. பி. 1090-ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்தின் கண் கடாரத்தரசனால் எடுப்பிக்கப் பெற்ற இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் புத்த 1. S.I.I., Vol. VII, No. 538.

2. Ibid. Vol. VI, No. 57.

3.

Ibid. Vol. IV, No. 1263; Ibid. Vol. VI, No. 201. விஜயாபரண ஸ்ரீ ராஜேகேசரி வர்ம பெம்மானடிகள் கங்கா காவேரி பர்யந்தம் சப்தமோ விஷணு வர்த்தனராக ஸ்ரீதிரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு திவ்ய ராஜ்ய சம்பவத் சரம் முப்பத் தேழாவது.’