உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

.

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 விகாரத்திற்குச் சிறந்த விளை நிலங்களைத் தம்பாற் கொண்ட சில ஊர்களை நம் குலோத்துங்கன் இறையிலியாக அளித்து அச்சமயத்தினரையும் ஆதரித்துள்ளனன். இவ்வேந்தன் அப்புத்த கோயிலுக்கு விட்ட நிவந்தங்களை உணர்த்துஞ் செப்பேடுகள் ஹாலண்டு தேயத்திலுள்ள லெய்டன் நகரப் பொருட்காட்சிச் சாலையில் இப்போது இருத்தல் அறியத்தக்கது'. இவற்றை யெல்லாம் ஆராய்ந்து உண்மை காணுமிடத்து, இம்மன்னன் தன் காலத்தில் வழங்கிய எல்லாச் சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தனன் என்பது இனிது பெறப்படுகின்றது. பேரரசர்களாயிருப்பவர் கட்கு இருத்தற்குரிய இன்றியமையாத பெருங் குணங்களுள் சமயப் பொறையும் ஒன்றன்றோ? ஆகவே, பெருவேந்தனாகிய நம் குலோத்துங்கனும் அத்தகைய அரிய குணம் படைத் தவனாக விளங்கியதில் வியத்தற்குரிய தொன்றுமில்லை என்க. குலோத்துங்கனது கல்விச் சிறப்பு

இவ்வரசர் பெருமானைப் 'பல்கலைத்துறை நாவிலுறைந்தவன்* என்றும் ‘அறிஞர் தம்பிரான் அபயன்” என்றும் ஆசிரியர் சயங்கொண்டார் தம் கலிங்கத்துப் பரணியில் குறிப்பிட்டிருத் தலால் இவன் தமிழ் மொழியிலும் ஆரியம் தெலுங்கு முதலான பிற மொழிகளிலும் புலமை யெய்திச் சிறப்புற்றிருந்தனன் என்பது நன்கறியக் கிடக்கின்றது அன்றியும், இவன் இசைத் தமிழ் நூலொன்று இயற்றியுள்ளனன் என்பது ‘சோழ குலசேகரன் வகுத்த இசை” எனவும் 'தாளமுஞ் செலவும் பிழையாவகை தான் வகுத்தன தன்னெதிர் பாடியே - காளமுங்களிறும் பெறும் 1. Ep. Ind., Vol. XXII, No. 35.

2.

க. பரணி, 11 தா, 8.

3. மேற்படி 4, தா. 4.

4.

உரைசெய்பல கல்விகளி னுரிமைபல சொல்லுவ தென்

உவமையுரை செய்யி னுலகத்

தரசருள ரல்லரென வவைபுகழ மல்குகலை

அவையவை பயின்ற பிறகே'

என்று கலிங்கத்துப் பரணியிலுள்ள வேறு ஒரு பாடலும் இவன் புலமையைத் தெளிவாகப் புலப்படுத்தி நிற்றல் காண்க.

5.

க. பரணி, 10, -தா. 54.