உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

49

பாணர்தம் கல்வியிற் பிழை கண்டனன் கேட்கவே" எனவும் ஆசிரியர் சயங்கொண்டார் கூறியிருத்தலால் இனிது புலனா கின்றது. அந்நாளில் இசைவாணர்களாகிய பாணர்கள் இவ் வேந்தனது இசை நூலைப் பயின்று நன்கு பாடி வந்தனர் என்பதும் மேலே குறித்துள்ள பாடலால் நன்குணரப்படும். அன்றியும், இவன் தேவிமார்களுள் ஒருத்தியாகிய ஏழிசை வல்லபி என்பாள், தன் கணவன் இயற்றிய இசை நூலைப் பயின்று அம்முறையைப் பின்பற்றி இனிமையாகப் பாடி ஏழிசையையும் வளர்த்து வந்தனள் என்று கலிங்கத்துப் பரணி கூறுகின்றது.' இவற்றையெல்லாம் நோக்குங்கால், நம் குலோத்துங்கன், 'கலையினொடுங் கவிவாணர் கவியினொடும் இசையினொடும் பொழுது போக்கினான் என்று ஆசிரியர் சயங்கொண்டார் கூறியிருப்பது உண்மைச் செய்தியே எனலாம். ஆகவே, இவன் புலவர்களிடத்தில் பெரு மதிப்பும் அன்பும் வைத்து அன்னோரை ஆதரித்து வந்தனன் என்பது தொள்ளிது. இவன் வடகலிங்கத்தில் பெற்ற பெரு வெற்றியைப் பாராட்டி, கவிச் சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி என்னும் ஓர் அரிய நூல் இயற்றியிருப்பதும்* கவி குமுத சந்திரன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற திருநாராயண பட்டர் என்பவர் குலோத்துங்க சோழ சரிதை என்ற காப்பியம் ஒன்று பாடி யிருப்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கனவாம்.

93

1.

மேற்படி, 11, – தா. 13.

2. மேற்படி, 10, -தா.54.

3. மேற்படி, மேற்படி, - தா. 46.

4. கலிங்கத்துப் பரணியையும், அதன் ஆசிரியராகிய சயங் கொண்டாரையும், அந்நூலைப் பெற்ற முதற் குலோத்துங்க சோழனையும் 'பாடற் பெரும்பரணி தேடற் கருங்கவி கவிச்சக்கரவர்த்தி பரவச் செஞ்சேவ கஞ்செய்த சோழன் றிருப்பெயர செங்கீரை யாடியருளே' என்று கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் தாம் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழில் பாராட்டியிருத்தல் அறியத்தக்கது.

5.

Ins. 198 of 1919. குலோத்துங்க சோழ சரிதை என்னும் இந்நூல் இக்காலத்தில் கிடைக்கவில்லை. இது பிரஞ்சு அரசாங்கத்திற்குட்பட்டதாய் புதுச்சேரிக் கண்மையிலுள்ள திரிபுவனி என்னும் ஊரில் அரசன் விருப்பின்படி அந்நாளில் கூடிய பேரவையில் அரங்கேற்றப்பெற்றது. இந் நூலாசிரியராகிய திருநாராயணபட்டர் என்பவர் அவ்வூரினர் ஆவர். அவர்க்கு அவ்வூரில் இறையிலி நிலம் பரிசிலாக வழங்கப்பெற்றுளது. எனவே அவரது நூல் பெருமதிப்பிற் குரியதா யிருந்திருத்தல் வேண்டுமென்பது திண்ணம்.