உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

குலோத்துங்கன் சிறப்புப் பெயர்கள்

5

8

6

இவன் இளமையில் இராசேந்திரன் என்ற பெயரும், வேங்கி நாட்டில் சப்தம விஷ்ணுவர்த்தனன் என்ற பெயரும், சோணாட்டில் அபிடேக நாளில் குலோத்துங்கன் என்ற பெயரும், பெற்று விளங்கியமை முன்னர்க் கூறப்பட்டுள்ளது.அப் பெயர் களைத் தவிர வேறு சில சிறப்புப்பெயர்களும் அந்நாளில் இவனுக்கு வழங்கியுள்ளன. அவை, அபயன், சயதரன்,* சயதுங்கன்,3 விருதராசபயங்கரன், கரிகாலன், ராசநாரயணன், உலகுய்ய வந்தான்," திருநீற்றுச்சோழன், மனுகுலதீபன்,' உபய குலோத்தமன்,° என்பனவாம். இவற்றுள் சிலவற்றைக் கலிங்கத்துப் பரணியிலும் சிலவற்றைக் கல்வெட்டுக்களிலுங் காணலாம். திரிபுவன சக்கரவர்த்தி என்னும் பட்டம் புனைந்து கொண்டு அரசாண்ட சோழமன்னர்களுள் இவனே முதல்வன் ஆவான். இச்சிறந்த பட்டமும் இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டாகிய கி.பி. 1075 முதல் தான் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. இவனுக்குப் பிறகு ஆட்சிபுரிந்த இவன் வழித்தோன்றல்கள் எல்லோரும் இப்பட்டம் புனைந்தே அரசாண்டு வந்தனர் என்பது அன்னோர் கல்வெட்டுக்களால் நன்குணரக் கிடக்கின்றது. தலைநகர்

நம் குலோத்துங்கன் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தலைமை நகரம் கங்கைகொண்ட சோழபுரமாகும். இந்நகர் இவன் தாய்ப் பாட்டனாகிய கங்கைகொண்ட சோழனால் அமைக்கப்பெற்றது என்பது முன்னர்விளக்கப்பட்டுள்ளது.

1.S.I.I.,Vol. IV. No. 1338.

2. Ep. Ind., Vol. V, No. 13, C and D.

3. க.பரணி, 13 - தாழிசைகள் 25, 41.

-

4. மேற்படி 6 - தா. 14.

5. மேற்படி 13 - தா. 94.

6. S.I.I., Vol. I, p. 519.

7.

க. பரணி, 13 தா .93.

8. S.I.I., Vol. VII, No. 538.

9. க.பரணி, 13 - தா. 91.

10. மேற்படி, 1 - தா. 2.