உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

3

51

ஆசிரியர் சயங்கொண்டார், இவ்வேந்தன் மீது தாம் பாடிய கலிங்கத்துப் பரணியில் இப்பெரு நகரைக் கங்காபுரி' என்று குறிப்பிட்டிருப்பது அறியற்பாலது. முடிகொண்ட சோழபுரம்" என்னும் பழையாறை நகரும் காஞ்சிமாநகரும் சோழ இராச்சியத்தின் தென்பகுதியிலும் வடபகுதியிலும் முறையே இரண்டாவது தலைநகரங்களாக விளங்கின. ஒவ்வோர் ஆண்டிலும் சில திங்கள்களில் இவ்வேந்தன் அந்நகர்களில் தங்கியிருத்தலும் உண்டு. விக்கிரம சோழபுரம் திருமழபாடி முதலான இடங்களிலும் இவன் அரண்மனைகள் இருந்தன என்று சில கல்வெட்டுக்களால் தெரிகிறது.

குலோத்துங்கன் மனைவியரும் மக்களும்

இவனுடைய பட்டத்தரசியாக விளங்கியவள் மதுராந்தகி என்பாள். இவ்வரசி, இவனுடைய அம்மானாகிய இரண்டாம் இராசேந்திர சோழன் மகள். இவளுக்கு தீனசிந்தாமணி என்ற பிறிதொரு பெயரும் உண்டு. இவள், 'சிவனிடத் துமை யெனத் தீனசிந்தாமணி புவன முழுதுடையாள்' என்று கல்வெட்டுக்களில் மிகச் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளனள். குலோத்துங்கனது ஆட்சியின் இருப்பத்தாறாம் ஆண்டிற்குப் பிறகு இவளைப் பற்றிய குறிப்பொன்றும் கல்வெட்டுக்களில் காணப்பட வில்லை. எனவே, அதற்குப் பிறகு இவள் இறந்திருத்தல் வேண்டும். ஆகவே, இவ்வேந்தனது ஆட்சியின் முற்பகுதியில் இவள் பட்டத்தரசியாகத் திகழ்ந்தனள் எனலாம். இவளுக்குப் பிறகு, இவனுடைய மற்றொரு மனைவியாகிய தியாகவல்லி என்பவள் பட்டத்தரசியாயினள். இவளைத் 'திருமாலாகத்துப் பிரியாதென்றும் - திருமகள் திகழ்ந்தெனத் தியாகவல்லி' என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறுகின்றன. அன்றியும், ஆசிரியர் சயங்கொண்டார், ‘சென்னி ஆணையுடன் ஆணையை நடத்து

1.

க. பரணி, 13 – தா. 61.

2. Ins. 93 of 1910.

3.

க. பரணி, 11 - தாழிசைகள் 3. 4, 5; S.I.I., Vol. III, No.73

4. Ins. 114 of 1919; S.I.I., Vol. VII, No. 461.

5. Ins. 231 of 1916.