உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4 முரிமைத் தியாகவல்லி நிறைச்செல்வி" என்று இவ்வரசியின்

பெருமையையும் அரசன் இவள்பால் வைத்திருந்த மதிப்பினையும் நன்கு விளக்கியுள்ளனர்.

இவ்வேந்தன்

ஆட்சியின் பிற்பகுதி முழுவதும் இவளே பட்டத்தரசியாக இருந்தனள் என்று தெரிகிறது. இவனது மெய்க்கீர்த்தியில் குறிக்கப் பெற்றுள்ள வேறொரு மனைவி ஏழிசை வல்லபி என்பாள். இவளைக் 'கங்கை வீற்றிருந்தென மங்கையர் திலகம் - ஏழிசை வல்லபி ஏழுலகுமுடையாள்' என்று கல்வெட்டுக்கள் பெரிதும் பாராட்டுகின்றன. ஆசிரியர் சயங்கொண்டாரும்

வளை, 'ஏழுபாருலகொ டேழிசையும் வளர்க்க உரியாள்2 என்று புகழ்ந்துள்ளனர். இவ்வரசி தன் நாயகனாகிய குலோத்துங்கன் எழுதிய இசைநூலில்' பெரும் புலமையுடைய வளாய் ஏழிசைைையயும் வளர்த்து வந்தமையால் ஏழிசை வல்லபி என்னும் சிறப்புப்பெயர் பெற்றனள். திருவிடை மருதூரிலுள்ள கல்வெட்டொன்றில் காணப்படும் 'நம் பிராட்டியார் சீராமன் அருமொழி நங்கையாகிய ஏழுலக முடையார்' என்னுங் குறிப்பினால் ஏழிசை வல்லபி என்று சிறப்புப் பெயருடன் நிலவிய இவ்வரசி அருமொழி நங்கை என்னும் இயற் பெயருடையவளா யிருந்திருத்தல் வேண்டு மென்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இம்மூவரே யன்றி வேறு நான்கு மனைவியரும் நம் குலோத்துங்கனுக்கு இருந்தனர் என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. அன்னோர், கம்பமாதேவி, காடவன்மாதேவி, சோழகுலவல்லி, திரைலோக்கிய மாதேவி என்போர். இவர்களுள் காடவன் மாதேவி என்பாள் பல்லவர் குலத்தில் தோன்றியவள் ஆவாள். கம்பமாதேவி கேட்டுக்கொண்டவாறு இவ்வேந்தன் தாம் இருவரும் பிறந்த பூசம் சுவாதி ஆகிய நாட்களில் விழா நடத்தும் பொருட்டுத்

1. க.பரணி, 10 - தா. 55.

2. மேற்படி மேற்படி - தா. 54.

5

3. நம் குலோத்துங்கன் இசைத் தமிழிலும் புலமையுடையவனாயிருந்தமையோடு அத்துறையில் ஒரு நூலும் எழுதியுள்ளனன் என்பது முன்னர் விளக்கப்பட்டது. அந்நூல் இசைத்தமிழ் இலக்கியமாக இருத்தல் வேண்டும்.

4. Ins. 304 of 1907.

5. Ins. 111 of 1912.