உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

53

தொண்டைநாட்டிலுள்ள சிற்றீச்சம் பாக்கம் என்னும் ஊரின் வருவாயைக் காஞ்சி மாநகரிலுள்ள ஒரு கோயிலுக்கு அளித்துள்ளமையோடு அவ்வூர்க்கு கம்பதேவி நல்லூர் என்ற பெயரும் வழங்கியுள்ளனன். அன்றியும், தஞ்சாவூர் ஜில்லா வில்லுள்ள நாகப்பட்டினம்' தன் மனைவியின் பெயரால் சோழகுலவல்லிப்பட்டினம் என்று வழங்கிவருமாறு அதற்கு அப்பெயர் வைத்துள்ளனன். இவனுடைய லெய்டன் செப் பேடுகளில் அப்பெயர் குறிக்கப்பட்டிருப்பது அறியத்தக்க தாகும்.3

குலோத்துங்கன் மனைவியருள் பட்டத்தரசியாயிருந் தவளைப் புவனமுழுதுடையாள் எனவும், அவனி முழுதுடையாள் எனவும் மற்றையோரை ஏழுலகமுடையாள், திரிபுவனமுடையாள், உலகுடையாள் எனவும் அக்காலத்தில் வழங்கியுள்ளனர். இச் சிறப்புப் பெயர்களை அன்னோரின் இயற் பெயர்களோடு இணைத்தே அந்நாளில் வழங்கி வந்தனர் என்பது கல்வெட்டுக் களால் புலனாகிறது.

4

நம் குலோத்துங்கனுக்கு ஆண்மக்கள் எழுவர் இருந்தனர். அவர்கள் எல்லோரும் இவன் முதல் மனைவியும் பட்டத்தரசியு மாகிய மதுராந்தகியின் புதல்வர் ஆவர். அவர்களுள் முதல் நால்வர், இராசராச சோழகங்கன், இராசராசமும்முடிச் சோழன், வீர சோழன், விக்கிரம சோழன் என்போர்; மற்ற மூவரின் பெயர் தெரியவில்லை. இந்நால்வரும் கி.பி. 1077 முதல் கி.பி. 1118 வரையில் வேங்கி நாட்டில் தம் தந்தையின் பிரதி நிதி களாயிருந்து அரசாண்டவர் என்பது முன்னர் விளக்கப் பட்டுள்ளது. இவ் வேந்தனுக்கு சுத்தமல்லியாழ்வார், அம் மங்கையாழ்வார் என்னும் பெண்மக்கள் இருவர் இருந்தனர். அவர்களுள் சுத்தமல்லியாழ்வார் இலங்கை வேந்தனாகிய வீர

1. Ins. 45 of 1921. கம்பமா தேவிக்குத் திரிபுவன மாதேவி என்னும் பிறிதொரு பெயரும் அந்நாளில் வழங்கியது என்று தெரிகிறது.

2. Ind. 39 of 1921.

3. The Smaller Laiden Plates of Kulottunga I. (Ep. Ind., Vol. XXII, No. 35)

4. Ep. Ind., Vol. VI, p. 335.