உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

பாகுதேவனுக்கு மணஞ்செய்து கொடுக்கப் பெற்றமை ஈழ நாட்டிலுள்ள ஒரு கல்வெட்டால் வெளியாகின்றது. இவனுடைய மற்றொரு மகளான அம்மங்கையாழ்வார் கி.பி.1184-ஆம் ஆண்டு வரையில் உயிர் வாழ்ந்திருந்தமை, சிதம்பரத்திலுள்ள மூன்றாங் குலோத்துங்க சோழனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட் டொன்றால்' நன்கு புலனாகின்றது. எனவே, அவ்வம்மையார் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தவர் என்பதும் அதுபற்றிப் பெரிய நாச்சியார் என்று அக்காலத்தில் வழங்கப் பெற்றனர் என்பதும் அக்கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது.

இனி, கீழைக் கங்க மன்னனாகிய இராசராச தேவேந்திர வர்மனுக்குப் பட்டத்தரசியாயிருந்த இராசசுந்தரி என்பாள் நம் குலோத்துங்க சோழனுடைய மகள் என்றும் கலிங்கப் போரில் கருணாகரத் தொண்டைமான்பால் தோல்வியுற் றோடி யொளிந்த அனந்தவர்ம சோகங்கன் என்பான் அவன் புதல்வனே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர் அஃதுண்மையெனக்

5. (1) ஸ்ரீ ஐயபா (2) தேவர்க் (3) கு யாண்டு எ (5) ட்டாவது பா (5) ண்டியனார் வீ (6) ரப்பெருமாள் ந (7) ம் பிராட்டியா (8) ர் குலோத்துங்க (9) க சோழதேவர் திரு (10) ம களார் சுத்தமல்லி (11) யாழ்வார் மாகலான (12) விக்கிரமசலாமேகபு (13) ரத்து விக்கிரமசலா (14) மேக ஈஸ்வர முடையா (15) ர்க்கு சந்திராதித்தவல் நின் (16) றெரிய இட்ட திருந (17) ந்தாவிளக்கொன்று (18) க்கு இட்டகாசு பத்து (19) முச்சாண் நீளத்தில் தரா (20) நிலை விளக்கு ஒன்று (21)’ Ep. Zeylanica, Vol. III, pp. 308 to 312.

இக் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற சுத்தமல்லி யாழ்வாரைச் சூரியவல்லி என்று பேராசிரியர் திரு. நீலகண்ட சாஸ்திரியார் ஆ.ஹ. வரைந்திருப்பது பொருந்துவதன்று. (The Colas, Vol. II, p. 53) நம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களில், சுத்தமல்லி விண்ணகராழ்வார் என்பது முதலில் பயின்று வருதல் உணரத்தக்கது. (Ins. 234 of 1929)

2. S.I.I., Vol. IV, No. 226. இத்தனையும் இந்த இராசேந்திர சோழரான சுங்கந் தவிர்த்தருளிய குலோத்துங்க சோழதேவர் மகளார் அம்மங்கை யாழ்வாரான பெரியநாச்சியார்க்கு க்ஷேமமாக சம்மதித்து’

கி. பி. 1183ல் உயிர் வாழ்ந்து கொண்டிருந்ததாகச் சிதம்பரக் கல்வெட்டால் அறியப்பெறும் இவ் வம்மங்கையாழ்வார் கி. பி. 1076ல் இருந்திருக்க இயலாது. (The Colas Vol. II, pp. 53 and 54) ஆதலால், மைசூர்க் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற அம்மங்கை யாழ்வார் நம் குலோத்துங்கனுக்குத் தாயாராக இருத்தல் வேண்டும் என்பது தேற்றம்.

3. The Indian Antiquary, Vol. XVIII, Nos. 178 and 180. Vizagapatam Copper Plates of Anantavarma Ghoda Ganga deva. The Colas, Vol. II, p. 37. குலோத்துங்கனுக்கு இளமையில் இராசேந்திரன் என்னும் பெயர் வழங்கியமைபற்றி டாக்டர் பிளீட் என்பார் இராசசுந்தரியின் தந்தை குலோத்துங்க சோழன் என்று முதலில் கூறினர். (M.E.R. for 1919, p. 11) அதனையே ஆராய்ச்சியாளர் பலரும் கூறிவருவாராயினர்.