உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




vi

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-4 வெளியிட்டவர் வரலாற்றறிஞர் க.அ. நீலகண்ட சாத்திரியார்; திருத்திய இரண்டாம் பதிப்பு 1955இல் வெளிவந்தது.

3. வரலாற்றுத் துறையில் தடம்பதித்த தமிழறிஞர்களுள் தலைசிறந்த சிலருள் ஒருவர் சதாசிவப் பண்டாரத்தார்.(1892-1961) தமிழில் "பிற்காலச் சோழர் சரித்திரம்” என்ற பெயரில் அவர் எழுதி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் வெளியிட்ட காலம் வருமாறு:

முதற்

பதிப்பு

2-ஆம், 3ஆம்பதிப்புகள் பண்டாரத்தாரேதிருத்தியது

பகுதி 1கி.பி.846 - 1070;

1949

2ஆம் 1954; 3ஆம் 1958

பகுதி II 1070 - 1279;

1951

2ஆம் 1957

பகுதி III சோழர் அரசியல்

1961

பண்டாரத்தார் பகுதி 1 முன்னுரையில் 1949இல் குறித்துள்ளது போல் அவர் தமது நூலை கல்வெட்டுப் புத்தகங்கள், அறிக்கைகள்; சாத்திரியார் ஆங்கிலநூல், சில தமிழ் நூல்கள், சில ஊர்களுக்கு பண்டாரத்தாரே நேரில் சென்று படித்து அறிந்து வந்த புதிய செய்திகள் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வரலாற்றை எழுதியுள்ளார். தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தமது 1949 முன்னுரையில் குறிப்பிடுவது போல (அதுவரைத் தமிழில் வெளிவந்த வரலாற்று நூல்கள் போல் "பாட புத்தகமாக" இல்லாமல்) சிந்தித்து ஆய்வு செய்து தமிழில் மூலநூலாக எழுதிய முதல் வரலாற்று நூல் இதுவாகும்: " the first original work of this kind in Tamil, distinguished from mere text books'

4(1) வரலாறு என்பது என்ன? “முற்காலத்தில் என்ன நடந்திருக்கலாம் என்பதைப் பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தன் ஒருவன் தனது மனத்தில் உருவாக்கிக் கொள்ளும் எண்ணமே அது. எழுதுபவனுடைய அறிவுநிலை, மனநிலை, அவனுடைய சமுதாயப் பார்வை, அவனுக்குக் கிட்டும் ஆதாரங்கள் ஆகியவற்றுக் கேற்பவே ஒரு காலத்தைப் பற்றி அல்லது ஒரு பொருளைப் பற்றி ஒருவன் வரலாறு எழுதுகிறான். எனவே ஒவ்வொரு காலத்தையும் பொருளையும் பற்றி பல்வேறு வரலாறுகள் இருக்கக் கூடியனவே.

"வரலாற்றாசிரியன் பட்டறிவு, பற்பல விஷயங்களைப் பற்றிய அவனுடைய கண்ணோட்டம் ஆகியவற்றால் உருவான அவனுடைய மனம்தான் அவன் எப்படி வரலாற்றைஎழுதுகிறான்என்பதை நிர்ணயிக்கிறது; விருப்பு வெறுப்பற்றவரலாற்றாசிரியன் முயற்கொம்புதான். எனவே எந்த வரலாற்று நூலும் முழுமையான அப்பட்டமான உண்மையைக் கார் உள்ளளவும்கடல் நீர் உள்ளளவும் நிர்ணயித்து விட்டதாக எண்ணி விடக்கூடாது.

காரி பெக்மான்.

""

"வருங்காலத்தில் என்ன நடக்கும் எனக் கூறத் தேவையான அறிவை விட பண்டு என்ன நடந்திருக்கும் என உன்னிக்கத் தேவையான அறிவு மிகநுட்பமானது அனதோல் பிரான்சு.

66

=

"வரலாற்றாசிரியன் அல்லது அவனைப் பயன்படுத்துபவர்கள் உள்ளத்தில் வெளிப்படையாகவோ அல்லது அவர்களுக்கே தெரியாமல் ஆழ்மனத்திலோ, உள்ள