உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணிந்துரை

vii

குறிக்கோள்களுடன் தான் வரலாறு எழுதப்படுகிறது. அக்குறிக்கோள்கள் பிற இனங்களை, குழுக்களைக் கட்டுப்படுத்துதலும் வசப்படுத்துதலும்; சமுதாயத்திற்கு இலக்குகளைக் காட்டி ஊக்குவித்தல்; குழுக்கள், வர்க்கங்களுக்கு உணர்ச்சியூட்டுதல்; அதிகாரத்தை ஏற்கெனவே கையிற் கொண்டுள்ளவர்களுக்கு வலுவூட்டுதல்; அதிகார மில்லாதவர்களிடையேயும், ஒடுக்கப்பட்டவரிடையேயும் இப்பொழுதுள்ள நிலைமையே சரி என்னும் பொந்திகை மனநிலையை ஏற்படுத்துதல் போன்றனவாம். ஜே.எச்.பிளம்ப்

66

=

""

வரலாற்றில் பெரும்பகுதி உன்னிப்பு வேலை; உன்னிப்பு வேலை; மீதி விருப்பு வெறுப்பின்படியான கூற்று"

66

வில் & ஏரியல் டுரான்ட்

'வரலாறு எழுதும் நாம் நம்காலத்தவர் சார்பில் மாந்த இனத்தின் முந்தைய நடவடிக்கைகளைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம். வரலாற்றாய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு பொழுது போக்குபவர் முந்தை வரலாற்று நடவடிக்கைகளைக் குறித்து இது அறிவுடையது, அது மூடத்தனமானது; இது மதுகையுடையது, அது கோழைத்தனம்; இச்செயல் நன்று, அச்செயல் தீது; என்றவாறு மதிப்பிட்டுக் கூறும் பொறுப்பைத் தட்டிக் கழித்தல் ஒல்லாது. காயடித்த வரலாற்றாசிரியன் நமக்குத் தேவையில்லை.

ஆர்.ஜி.காலிங்வுட்

ii) மேற்கண்டவற்றின் ஆங்கில மூலங்கள் வரலாற்று மாணவர் வசதிக்காகக் கீழே தரப்படுகின்றன.

History is a reconstruction of elements of the past in the mind of a human being of a later generation... In principle there will be multiple histories of any given period, each congruent to the mental world, social purposes, and sources available to the person who creates it.

Since the recreation of the past takes place in the mind of the individual historian which has been shaped by his personal experience and world view the unbiased hstorian is an unattainable idea.

By the very nature of the historical discourse there can be no final truth Gary Bechman "The Limits of Credulity" Journal of the Amercian Oriental Society 125.3

It needs rarer genius to restore the past than to foretell the future

- Anatole France

(History) is always a created ideology with a purpose, designed to control individuals or motivate societies, or inspire classes.. to strengthan the purpose of those who possessed power... and reconcile those who lacked it.

- J.H. Plumb ( 1969 ) The death of the past (quoted by Beckman).

"Most History is guessing and the rest is prejudice

- Will and Ariel Durant