உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

1

வென்று வாகை சூடியவன். கோதாவரி ஜில்லா ராமச் சந்திரபுரம் தாலுகாவைச் சேர்ந்த திராட்சாராமம் என்ற ஊரிலுள்ள பீமேசுரமுடைய மகாதேவர்க்குக் குலோத்துங்கனது ஆட்சியின் 25ஆம் ஆண்டில் இவன் ஒரு நுந்தாவிளக்கு வைத்தன னென்று அங்குச் செய்யுள் வடிவத்திலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. தன் பெற்றோர்கள் நற்கதி பெறுமாறு இவன் அக்கோயிலில் நுந்தா விளக்கு வைத்துள்ளமை மற்றொரு கல்வெட்டால் அறியப்படுகின்றது. இவ்வாறு சோணாட்டுத் தலைவர்கள் கங்கம், வேங்கி, கலிங்கம் முதலான நாடுகளில் அரசியல் அதிகாரிகளாக நிலவிய நாட்களில் புரிந்துள்ள அறங்கள், அந்நாடுகளிலுள்ள கல்வெட்டுக்களில் காணப்படுதல் அறியத்தக்க தொன்றாகும்.

(6) வேளான் மாதவனாகிய இராசவல்லபப் பல்லவரையன்

இவன், சோழமண்டலத்து விருதராச பயங்கரவளநாட்டு மண்ணி நாட்டிலுள்ள கடம்பங்குடி என்னும் ஊரினன். குலோத்துங்க சோழனுடைய அமைச்சர்களுள் ஒருவன். இவ்வேந்தனால் அளிக்கப்பெற்ற வேள், இராசவல்லபப் பல்லவ ராயன் என்னும் பட்டங்கள் பெற்றவன். குலோத்துங்க னது லெய்டன் சிறு செப்பேடுகளில் கி. பி. 1090-ல் இவன் பெயர் காணப்படுதலாலும் கோதாவரி ஜில்லா பீமாவரத்திலுள்ள திருமால் கோயிலுக்கு இவன் ஒரு நுந்தாவிளக்கு வைத்து அதற்கு கி.பி. 1115-ல் நிவந்தம் அளித்திருத்தலாலும் இவ் வமைச்சன் குலோத்துங்கன் ஆட்சிக்கால முழுவதும் உயர்

5

1. விக்கிரம சோழனுலா, வரிகள் 164-166. Ep. Ind, Vol. IX. p. 230.

2. புயல்மேவு பொழிற் றஞ்சை முதற்பஞ்ச நதிவாணன்

புதல்வன் பூண்ட

வயமேவு களியானை முடிகொண்டான் மாநெடுவேல்

வத்தர் வேந்தன்

இயன்மேவு தோளபயற் கிருபத்தை யாண்டதனில்

இடர்க் கரம்பைச்

செயன்மேவு மீச்சுரற்குத் திருநந்தா விளக்கொன்று திருத்தி னானே.

3. S.I.I., Vol. IV, No. 1339 A.

(S.I.I., Vol. IV, No. 1338)

4. Ep. Ind., Vol. XXII, No. 35.

வ்

5. Ibid., No. I VI. No. 20.