உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

61

(4) வாணகோ வரையன் சுத்தமல்லன் உத்தம சோழனாகிய இலங்கேசுவரன்

இவன் குலோத்துங்க சோழனுடைய அரசியல் அதிகாரி களுள் ஒருவன். வாணர் குடியில் தோன்றியவன்; அரசனால் வழங்கப் பெற்ற வாணகோவரையன் என்னும் பட்டம் எய்தியவன், கருணாகரத் தொண்டைமானோடு கலிங்கப் போர்க்குச் சென்ற படைத்தலைவர்களுள் ஒருவன். அதுபற்றிக் கலிங்கத்துப் பரணியில் ஆசிரியர் சயங்கொண்டாரால் புகழப் பெற்ற பெருமையுடையவன். இவன் திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள மேலப்பழுவூரிலிருந்த செங்கற் கோயிலைக் கற்றளியாக அமைத்து, அதற்குக் குலோத்துங்க சோழேச்சுரம் என்று பெயரிட்டு, நாள் வழிபாட்டிற்கும் பிறவற்றிற்கும் இறையிலி நிலங்கள் வழங்கியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்’ எனவே, இவன் சிவபத்தியும் அரசன்பால் பேரன்பும் உடையவன் என்பது தெள்ளிது.

(5) கஞ்சாறன் பஞ்சந்தி முடிகொண்டானான வத்தராயன்

இவன் சோழமண்டலத்தில் திருவிந்தளூர் நாட்டிலுள்ள கஞ்சாறு' என்னும் ஊரினன்; பஞ்சநதிவாணன் என்பவனுடைய புதல்வன், முடிகொண்டான் என்னும் இயற்பெயர் உடையவன் குலோத்துங்க சோழனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன்;

வ் வேந்தனால் அளிக்கப்பெற்ற வத்தராயன் என்ற பட்ட முடையவன். இது வத்ஸ ராஜன் எனவும் வச்சராயன் எனவும் வழங்கப் பெறுவதுண்டு. வச்சத் தொள்ளாயிரம் என்னும் நூல் இத்தலைவன் மீது பாடப்பெற்ற ஒரு பிரபந்தமாயிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுளது. இவன் பங்களூர் ஜில்லா நிலமங்கலந் தாலுகாவிலுள்ள மண்ணையில் குலோத்துங்க னுடைய பகைவர்களாகிய மேலைச் சளுக்கியர்களைப் போரில்

1. க. பரணி, 11 - தா, 54.

2. Ins. Nos. 389,390,392, 393 and 396 of 1924.

3. திருவிந்தளூர் என்பது திருவழுந்தூர் என்வும் கஞ்சாறு என்பது ஆனந்ததாண்டவபுரம் எனவும் இக் காலத்தில் வழங்கப் படுகின்றன. இவற்றுள், திருவிந்தளூர் மாயூரத்திற்கு அண்மையில் காவிரியாற்றின் வட கரையில் உள்ளது; ஆனந்ததாண்டவபுரம் இந்நாளில் ஒரு புகைவண்டி நிலையமாக இருக்கின்றது.