உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

(7) சேனாதிபதி ஞானமூர்த்திப் பண்டிதன் ஆகிய

மதுராந்தக பிரமாதி ராஜன்

இவன் சோழ நாட்டிலுள்ள நாலூர் என்னும் ஊரினன்; மதுராந்தகன் என்னும் இயற்பெயருடையவன்; குலோத்துங்க சோழனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன்; இவ்வேந்தனால் அளிக்கப்பெற்ற பிரமாதிராஜன் என்னும் பட்டம் பெற்றவன்; எனவே, இவன் அந்தணன் என்பது தெள்ளிது. இவன் திருவொற்றியூரிலுள்ள கோயிலில் ஒரு நுந்தாவிளக்கு வைப்பதற்கு நிவந்தம் அளித்துள்ளமை அறியத்தக்கது.

(8) அதிகாரி வீரசிகாமணி மூவேந்த வேளான்

இவன் குலேத்துங்க சோழனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; தொண்டைமண்டலத்திலுள்ள பாண்டியம்பாக்கம் என்னும் ஊரினன்; இவ்வரசனால் அளிக்கப் பெற்ற மூவேந்தவேளான் என்னும் பட்டமுடையவன். இவன் மைசூர் இராச்சியத்தில் கோலார் என்று வழங்கும் குவளாலபுரத்திலுள்ள துர்க்கையின் கோயிலில் நாள்வழிபாடு நன்கு நடைபெறுவதற்கு ஒரு குழு அமைத்து நிவந்தங்களை ஒழுங்குபடுத்துமாறு செய் தானென்று அவ்வூரிலுள்ள கல்வெட்டொன்று உணர்த்துகின்றது."

இனி, நம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குறுநில மன்னர்களுள், கல்வெட்டுக்களால் அறியப்படும் சிலரைப் பற்றிய செய்திகளையும் ஈண்டுக் குறிப்பிடுவோம்.

(1) கிளியூர் மலையமான்கள்

சி

இவர்கள் தென்னார்க்காடு ஜில்லாவில் அதன் வடமேற்குப் பகுதியாய் அமைந்திருந்த சேதி நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள் மலையமான் மரபினர். இவர்கள் வழிவழி ஆண்டுவந்தமைபற்றி அந்நாடு மலையமான் நாடு எனவும், மலாடு' எனவும் வழங்கப்பட்டு வந்தது என்பது

1. Ins. 119 of 1912; Ep. Ind., Vol. V, p. 106. 2.S.I.I.,Vol. III, No. 66.

3. இது செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நாடுகளுள் ஒன்றாகும்.