உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

3

65

உணரற்பாலது. இவர்கள் சேதிராயர் என்னும் பட்டமுடையவர்கள். கிளியூரைத் தம் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர்கள். குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் சேதி நாட்டிலிருந்து அரசாண்ட சிற்றரசர்கள், கிளியூர் மலையமான் பெரிய உடைய வனான இராசராச சேதிராயன்,1 சதிரன் மலையானான இராசேந்திர சோழ மலையமான்,' சூரியன் சாவன சகாயனான மலையகுல ராசன், சூரியன் மறவனான மலையகுல ராசன், 4 சூரியன் பிரமன் சகாயனான மலையகுல ராசன்' என்போர். இவர்களுள், இறுதியில் குறிப்பிடப் பெற்ற மூவரும் உடன்பிறந் தாராகவும் இராசேந்திர சோழ மலையமானுக்கு நெருங்கிய தொடர்புடையவராகவும் இருத்தல் வேண்டும். இவர்கள் எல்லோரும் குலோத்துங்க சோழனது ஆட்சியின் முற்பகுதியில் இருந்தவராவர். இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியிலிருந்த சேதி நாட்டுச் சிற்றரசன், கிளியூர் மலையமான் நானூற்றுவன் அத்திமல்லனான இராசேந்திர சோழச் சேதிராயன்' என்போன். இவன் திருக் கோவலூரிலுள்ள திருமால் கோயிலுக்கும் சித்தலிங்க மடத்திலுள்ள சிவன் கோயிலுக்கும் நிவந்தங்கள் அளித்துள்ளனன்.'

(2) தகடூர் அதிகமான்

இவன் கொங்கு நாட்டின் வடபகுதியையும் கங்க நாட்டின் தென் பகுதியையும் அரசாண்ட ஒரு குறுநில மன்னன். கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த கடையெழு வள்ளல்களுள் ஒருவனும் ஒளவையாரால் பாடப்பெற்றவனுமாகிய அதிகமான் நெடு மானஞ்சியின் வழியில் தோன்றியவன்; சேலம் ஜில்லாவில் இக்காலத்தில் தர்மபுரி என்று வழங்கும் தகடூரைத் தலைநகராகக் கொண்டவன். இவன் தர்மபுரியிலுள்ள இரு கோயில்களில்

1.S.I.I.,Vol. VII, No. 874.

2. Ibid, No.879.

3. Ibid, No. 879.

4. Ibid, No. 133.

5.S.I.I.,Vol. VII, No.989.

6. Ibid, No.134.

7. Ins 388 of 1909.