உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

போரில் வென்று வாகை சூடிய வீரச்செயலைப் பாராட்டி, அப்புலவர் கலிங்கப்பரணி பாடியுள்ளனர் என்பது அவரது தக்கயாகப் பரணியாலும் அதன் உரைக் குறிப்பினாலும் நன்கறியக்கிடக்கின்றது. அந்நூல் இக்காலத்தில் கிடைக்க வில்லை. தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் உணர்த்தா மலிருந்திருப்பின் ஒட்டக்கூத்தர் நம் விக்கிரம சோழன் மீது கலிங்கப்பரணி பாடிய செய்தியே மறைந்தொழிந்திருக்கும் என்பது ஒருதலை. ஒட்டக்கூத்தர், இரண்டாங் குலோத்துங்க சோழன் இரண்டாம் இராசராச சோழன் ஆகிய இருவர் மீதும் பாடியுள்ள இரண்டுலாக்களிலும்' விக்கிரமன் கலிங்கம் வென்று பரணி கொண்டதைப் பாராட்டியிருத்தல் அறியற் பாலதாம். அன்றியும், அவ்வாசிரியர் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழிலும் ' இவன் கலிங்கப் பரணி கொண்டமையைப் புகழ்ந்து கூறியிருப்பது உணரற்பாலது.

1. செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்

தென்றமிழ்த் தெய்வப் பரணிகொண்டு

வருத்தந் தவிர்த்துல காண்டபிரான்

மைந்தர்க்கு மைந்தனை வாழ்த்தினவே

(த.பரணி,9.பா.49.)

2. "இப்பரணி பாடினார் ஒட்டக்கூத்தரான கவிச் சக்கரவர்த்திகள். இப் பரணி பாட்டுண்டார் விக்கிரம சோழவேந்தர்" (மேற்படி பாடலின் கீழ்க் காணப்படும் உரைக்குறிப்பு.)

3. (a) விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப்

பெரும்பரணி கொண்ட பெருமாள் - தரும்புதல்வன்

கொற்றக் குலோத்துங்க சோழன்

(குலோத்துங்க சோழ னுலா, வரிகள் 55-57)

(b) தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப்

பரணி புனைந்த பரிதி - முரணிப்

புரந்தர னேமி பொருவ வகில

துரந்தரன் விக்கிரம சோழன்

(இராசராச சோழனுலா, வரிகள் 53-56)

4. பாவகன் வளைத்தெழு கலிங்கமும் விழுங்கப்

பகட்டணி துணித்தொரு பெரும்பரணி கொள்ளுஞ்

சேவக னபங்கனக ளங்கன் மதலாய்நின்

சேவடிக ளாலெமது சிற்றில்சிதை யேலே

(குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் IX பா. 3)

விக்கிரம சோழன் கொண்டதாக இவற்றில் குறிப்பிடப்பெற்ற கலிங்கப் பரணியைச் சயங்கொண்டாரது பரணியாகப் பலரும் கருதி வந்தனர்; அஃது ஒட்டக்கூத்தரது பரணி என்பது தக்கயாகப் பரணி உரையால் வெளியாதல் உணரற்பாலது.