உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

2

77

தலைநகராக இருந்தது எனலாம்.1 தில்லைமாநகர், காட்டு மன்னார்கோயில்' முதலான பேரூர்களில் அரண்மனைகளும் இருந்தன என்று தெரிகிறது. சோழ இராச்சியத்தில் பல ஊர் களில் கொட்டகாரம்' என்று வழங்கப்பெற்ற மண்டபங்களும் இருந்துள்ளன.

ஆட்சியின் சிறப்பு

வ்வேந்தன் ஆட்சிக் காலத்தில் பெரும்போர்களின்மை யின், இவன் தன் ஆளுகைக் குட்பட்ட நாடுகளை எல்லாம் நேரிற் பார்த்து மக்கட்கு நலம் புரிந்துவந்தனன் என்பது இவன் பல ஊர்களிலிருந்து அனுப்பியுள்ள உத்தரவுகளால் நன்கறியக் கிடக்கின்றது. தம் நாட்டைச் சுற்றிப் பார்த்து அரசியல் காரியங் களைக் கவனிப்பது அரசர்கட்குரிய இன்றியமையாக் கடமை யாகும். அக்கடமையில் நம் விக்கிரமன் சிறிதும் தவறிய வனல்லன் என்று ஐயமின்றிக் கூறலாம். எனவே, மெய்க்கீர்த்தி கூறுகின்றவாறு, இவன், 'மன்னுயிர்க்கெல்லாம் இன்னுயிர்த் தாய்போல் தண்ணளி பரப்பித் தனித் தனிப் பார்த்து மண்முழுதுங் களிப்பவும் தன் கோயிற்கொற்ற வாயிற்புறத்தி மணிநா வொடுங்கவும் ஆட்சி புரிந்து வந்த பெருவேந்தன் ஆவன். ஆகவே, இவன் ஆளுகையில் மக்கள் எல்லோரும் இன்னலின்றி வாழ்ந்து வந்தனர். என்பது தெள்ளிது.

-

அவைக்களப் புலவர்

விக்கிரம சோழன், கவிஞர் பெருமானாகிய ஒட்டக் கூத்தரைத் தன் அவைக்களப் புலவராகக் கொண்டிருந்தமை ம குறிப்பிடத்தக்கது. அவர் இவ்வேந்தன் மீது விக்கிரமசோழனுலா என்னும் நூலொன்று இயற்றியுள்ளனர். அன்றியும், இவன் ளமையில் வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாயிருந்த காலத்தில் தென் கலிங்க வேந்தனாகிய தெலுங்க வீமனைப்

1. Ins. 168 of 1906.

2. S.I.I., Vol. VII, No. 788.

3. Ins. 63 of 1918.

4. அரசன் தன் நாட்டைச் சுற்றிப் பார்த்து வருங்கால் அரண்மனை இல்லாத ஊர்களில் தங்கு வதற்கு அமைக்கப்பெற்றிருந்த மண்டபங்கள் அந்நாளில் கொட்டகாரங்கள் என்று வழங்கப் பட்டுள்ளன.