உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

பெருமானாகிய ஒட்டக்கூத்தர், இவன் அவ்வீதியமைத்த செய்தியைத் தாம் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழில் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். தில்லைத் திருக்கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பன்னிரண்டு தூண்களில் 'விக்கிரம சோழன் திருமண்டபம்" என்ற பெயர் பொறிக்கப் பெற்றுளது. எனவே, அம்மண்டபமும் இவ்வேந்தனால் அமைக்கப்பெற்றதாதல் வேண்டும். அதனை, இவன் ஆணையின் படி கட்டியவன் இவனுடைய படைத்தலைவனாகிய அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பான்.3 பொன்னம்பலவாணர் மாசித் திங்கள் மக நாளில் கடலாடி வீற்றிருக்க மண்டபமும் தில்லையம்பதியிலிருந்து அங்கு எழுந் தருளுவதற்குப் பெருவழியும் இவன் ஆட்சியில்தான் அமைக்கப் பெற்றன. அத்திருப்பணியை அரசன் வேண்டுகோளின்படி நிறைவேற்றி யவன் இக்காலிங்கராயனே யாவன். இம்மண்டபம் அந்நாளில் சிதம்பரத்தைச் சார்ந்த கிள்ளை என்னும் ஊரில் இருப்பது அறியத்தக்கது.

தலைநகர்

3

இவ்வரசர் பெருமானுக்குத் தலைநகராயிருந்தது கங்கை கொண்ட சோழபுரமேயாம். பழையாறை என்று இந்நாளில் வழங்கும் முடிகொண்ட சோழபுரமும் இவனுக்கு இரண்டாந் 1. ‘பாவக நிரம்புதிரு மாலுமல ரோனும்

பரந்தபதி னெண்கணனும் வந்துபர வத்தஞ்

சேவக நிரம்புதிரு வீதிபுலி யூரிற்

செய்த பெரு மான்மதலை சிற்றில்சிதை யேலே’

2. Ins. 616 of 1930.

(குலோந்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் 9-7.)

3. மல்லற் குலவரையா னூற்றுக்கான் மண்டபத்தைத்

தில்லைப் பிரானுக்குச் செய்தமைத்தான் - கொல்லம் அழிகண்டான் சேர னளப்பரிய வாற்றற்

கிழிவுகண்டான் தொண்டையா ரேறு.

(S.I.I., Vol. IV, p. 33)

4. மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும்

பேசற் றவற்றைப் பெருவழியும் - ஈசற்குத்

தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்தும்

மன்புலியா ணைநடக்க வைத்து.

(S.I.I., Vol. IV, p. 34)