உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

விக்கிரம சோழனது தில்லைத் திருப்பணி

75

இவ் வேந்தன் தன் ஆளுகையின் பத்தாம் ஆண்டில் பிற அரசர்கள் அளித்த திறைப்பொருளைக் கொண்டு தில்லையம் பதியில் அம்பலவாணரது கோயிலுக்குப் பற்பல திருப்பணிகள் புரிந்தனன் என்று இவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. அத்திருப் பணிகள் எல்லாம் கி. பி. 1128 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாளில் நிறைவேறின என்பது அம்மெய்க்கீர்த்தியிலுள்ள காலக் குறிப்பினால்' நன்கறியக் கிடக்கின்றது. தில்லைச் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த திருச்சுற்று மாளிகை, கோபுரவாயில், கூடசாலை, பலிபீடம் என்பவற்றிற்குப் பொன்வேய்ந்தமையும் தான் பிறந்த உத்திரட்டாதி நாளில் நடை பெறும் பெருவிழாவில் இறைவன் எழுந்தருளும் திருத்தேரைப் பொன்வேய்ந்து அதற்கு முத்து வடங்கள் அணிவித்து அழகுறுத்தியமையும் இவன் ஆற்றிய அரிய திருப்பணிகளாகும். அன்றியும், இறைவன் திருவமுது புரிவதற்குப் பொற்கலங்கள் அளித்தமையோடு கோயிலில் பொன்னாலாகிய கற்பகத்தருக் களும் இவன் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாம். தில்லைச் சிற்றம்பலத்தைச் சூழ்ந்துள்ள முதல் திருச்சுற்று மாளிகை விக்கிரம சோழன் திருமாளிகை என்று அந்நாளில் வழங்கியது என்பது சில கல்வெட்டுக்களால் தெரிகின்றது. அஃது இவன் திருப்பணி புரிந்ததாக மெய்க்கீர்த்தி கூறும் திருச்சுற்று மாளிகை போலும். இவன் தன் பெயரால் 'விக்கிரம சோழன் திருவீதி' என்ற பெருவீதி, தில்லைமா நகரில் அமைத்தனன் என்று இவனது மெய்க்கீர்த்தி யுணர்த்துகின்றது. முற்காலத்தில் அது 'விக்கிரம சோழன் தெங்குத் திருவீதி' என்று வழங்கியுள்ளது. கவிஞர்

1. S.I.I., Vol. V. No. 458.

2. Ep. Ind., Vol, VII p. 5.

பத்தா மாண்டிற் சித்திரைத் திங்கள்

அத்தம் பெற்ற ஆதிவா ரத்துத்

திருவளர் மதியின் திரயோதசிப் பக்கத்து

இன்ன பலவும் இனிது சமைத்தருளி

என்னும் மெய்க்கீர்த்திப் பகுதியிலுள்ள காலக் குறிப்பினைக் காண்க.

3. Ins. Nos. 282, 284 and 287 of 1913.

4. Ins. 312 of 1913.

4