உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

அறிவிக்கின்றது. இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குமிடத்து, முதற் குலோத்துங்க சோழனது ஆட்சியின் இறுதியில் இழந்துவிட்ட கங்கபாடி நாட்டின் ஒரு பகுதியையாவது விக்கிரமசோழன் கைப்பற்றி யிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது.

அன்றியும், வேங்கி நாட்டிலும் கங்கபாடி நாட்டிலும் காணப்படும் இவன் கல்வெட்டுக்கள், அவ்விரு நாடுகளும் இவன் ஆட்சிக்காலத்தில் மீண்டும் கைப்பற்றப்பட்டுச் சோழர் ஆளுகைக்கு உள்ளாயின என்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்து வனவாகும்.

பெருவெள்ளத்தால் நிகழ்ந்த பஞ்சம்

2

விக்கிரம சோழனது ஆட்சியின் ஆறாம் ஆண்டாகிய கி.பி.1125-ல் தொண்டை நாட்டிலும் நடு நாட்டிலும் பெருவெள்ளம் ஏற்பட்டு அதனால் அந்நாடுகளில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று என்பது வடஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருவதிகையிலும் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. அன்றியும், இவனது ஆட்சியின் பதினோராம் ஆண்டில் இத்தகைய பஞ்சம் ஒன்று சோழ நாட்டிலும் ஏற்பட்டது என்பது தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கோவிலடி'யில் காணப்படும் கல்வெட்டொன்றால் புலப்படுகின்றது. ஆனால், இதற்குக் காரணம் தெரியவில்லை. பஞ்சம் நிகழ்ந்த காலங்களில் அரசனும் செல்வமிக்கவர்களும் தம்பெருங்கொடையால் மக்களை இயன்றவரையில் காப்பாற்றியமையோடு கோயிலதிகாரிகள் அன்னோர்க்குக் கடன் கொடுத்து உதவி புரிந்திருத்தலும் குறிப்பிடத்தக்கது.

1. S.I.I., Vol. VII, No. 96. 'குடநகர்........ஊரோம் இவ்வூர் யாண்டு ஆறாவது பெருவெள்ளங்கொண்டு ஊரும் போகமும் அழிந்து அநர்த்தப்பட்டு இவ்வூரிறை இறுக்கைக் குடலில்லாமை யால் விற்றுக்கொடுத்தோம்.'

2.S.I.I., Vol. VIII, No. 303. 'மகா சபையோம் இவ்வூர்த் திருமேற் கோயிலான நியாய பரிபாலன விண்ணகராழ்வார் கோயிலிலே கூட்டம் குறைவறக் கூடியிருந்து நம்மூர் யாண்டு

6 ஆவது கடமைத் தட்டுண்டாய் இத் தட்டுக்கு சமுதாயமான நிலத்திலே சிறிது நிலம் விற்றாயினும் கடமைத் தட்டுப் போக்கறுக்க வேணுமென்று மகா சபையோம் சம்மதித்து....... நாங்கள் விற்றுக்கொடுத்த நிலமானது’

"

3.S.I.I., Vol. VII, No. 496. 'இவ்வூர் வடபிடாகை திருச்சடை முடியுடைய மகாதேவர் கோயிலில் திருமண்டபத்தில் கூட்டம் குறைவறக் கூடியிருந்து பண்ணின பரிசாவது காலம் பொல்லாதாய் நம்மூர் அழிந்து குடியோடிப் போய் கிடந்தமை'-