உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

73

விக்கிரமாதித்தன், வெலநாண்டுத் தலைவனை வென்று அந்நாட்டைத் தன் ஆட்சிக்குட்படுத்திவிட்டான். அந்நாடும் கி.பி. 1126-ல் அவ்வேந்தன் இறக்கும் வரையில் அவன் ஆளுகைக்குட்பட்டிருந்தது என்பது அங்குக் காணப்படும் அவன் கல்வெட்டுக்களால்' நன்கறியக் கிடக்கின்றது. எனினும் கி.பி.1127-ல் மகா மண்டலேசுவரன் நம்பயன் என்பான், விக்கிரம சோழனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாய் வேங்கி நாட்டிலிருந்து அரசாண்டனன் என்று குண்டூர் ஜில்லாவிலுள்ள கல்வெட்டொன்று உணர்த்துகின்றது. கி.பி. 1135-ல் வெல நாண்டுத் தலைவர்கள் நம் விக்கிரம சோழனுக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னராயிருந்தனர் என்பது கிருஷ்ணா ஜில்லாவிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படுகின்றது. எனவே, கி. பி. 1126-ல் சளுக்கிய விக்கிரமாதித்தன் இறந்தபிறகு வேங்கி நாட்டை மீண்டும் தன் ஆட்சிக்குட்படுத்தவேண்டு மென்று விக்கிரம சோழன் முயன்று, அம்முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டனன் என்று ஐயமின்றிக் கூறலாம். ஆகவே, வேங்கி நாட்டின் பெரும்பகுதி, கி. பி. 1126-க்குப் பிறகு இவன் ஆளுகைக்குள் இருந்தது என்பது ஒருதலை.

விக்கிரமனும் கங்கபாடி நாடும்

3

மைசூர் இராச்சியத்தில் உள்ள கோலார் ஜில்லாவில் சுகட்டூர் என்னுமிடத்தில் விக்கிரம சோழனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிய உதயமார்த்தாண்ட பிரமமாராயன என்பான் கி.பி. 1126-ல் ஒரு சிவன் கோயில் எடுப்பித்து அதற்கு நிவந்தமாக இறையிலி நிலம் அளித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. அன்றியும், அந்த ஜில்லாவிலுள்ள மற்றொரு கல்வெட்டு இவ்வேந்தனது ஆட்சியின் பத்தாம் ஆண்டில் குரநெல்லி உலோகீசுவரமுடைய மகாதேவர்க்கு விக்கிரம சோழ வீர நுளம்பன் ஒரு விமானம் அமைத்த செய்தியை

1. S.I.I., Vol. IX, Nos. 196 and 213.

2. Ep. Ind., Vol. VI, No. 21A.

3. Ibid, No. 123.

4. Ep. Car., Vol. X, Sidlaghatta, Nos. 8 and 9.

5. Ibid, Srinivasapur, No. 61.