உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4 இவன் ஆட்சிக் காலத்தில் ஆண்டு தோறும் உத்திரட்டாதி நாளில் பெருவிழா நிகழ்ந்ததென்று இவன் மெய்க்கீர்த்தி' உணர்த்துவதும் இதனை நன்கு வலியுறுத்துதல் காண்க.

இவ்வேந்தர்க்கு இரண்டு மெய்க்கீர்த்திகள் கல்வெட்டுக் களில் காணப்படுகின்றன. இவற்றுள் பெரியது, 'பூமாலை மிடைந்து பொன்மாலை திகழ்” என்று தொடங்குகின்றது; சிறியது, 'பூமாது புணரப் புவிமாது வளர” என்று தொடங்கு கின்றது. இவையிரண்டும் இவன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டு முதல் இவன் ஆட்சிக் காலம் முழுமையும் கல்வெட்டுக் களில் காணப் படுதல் குறிப்பிடத்தக்கது. இவன் இளமைப் பருவத்தில் வேங்கி நாட்டிலிருந்த காலத்தில் கலிங்க நாட்டில் நிகழ்த்திய போரொன்றைத் தவிர, மற்ற வரலாற்றுச் செய்தி யொன்றும் இம்மெய்க்கீர்த்திகளில் இல்லை. எனினும், இவன் தன் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் தில்லைச் சிற்றம்பலத் தெம்பெருமானுக்குப் புரிந்த அருந் தொண்டுகள் ‘பூமாலை மிடைந்து' என்று தொடங்கும் பெரிய மெய்க்கீர்த்தியில் சொல்லப்பட்டுள்ளன. எனவே, குறிப்பிடத்தக்க பெரிய சரித நிகழ்ச்சியொன்றும் இவன் ஆட்சிக் காலத்தில் நிகழவில்லை யென்று கூறலாம்.

விக்கிரமனும் வேங்கி நாடும்

கி.பி. 1118-ஆம் ஆண்டில் இவன் வேங்கியிலிருந்து சோழ நாட்டிற்குத் திரும்பி இளவரசுப் பட்டம் பெற்றவுடன், அந்நாடு வெலநாண்டுத் தலைவனாகிய முதலாங் கொங்கனுடைய மகன் சோடன் என்பவனுக்குக் குலோத்துங்க சோழனால் அளிக்கப் பட்டது. உடனே மேலைச் சளுக்கிய வேந்தனாகிய ஆறாம்

4

1. இருநிலந் தழைப்ப இமையவர் களிப்பப்

பெரிய திருநாட் பெரும்பெயர் விழாவெனும் உயர்பூ ரட்டாதி யுத்திரட் டாதியில்

அம்பல நிறைந்த அற்புதக் கூத்தர்

இம்பர் வாழ எழுந்தருளு வதற்கு

திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து

(விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தி)

2.S.I.I., Vol. III, No. 79; Ibid, Vol. V, No. 458.

3. Ibid, Vol. III, No. 80.

4. Ep. Ind., Vol. IV, No. 4, Verses 34 and 35.