உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




71

17. விக்கிரம சோழன் (கி. பி. 1118 – 1136)

இவ்வரசர் பெருமான் முதற் குலோத்துங்க சோழனுடைய புதல்வன்; இளமைப் பருவத்தில் வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாயிருந்து அதனை ஆட்சி புரிந்தவன்; கி. பி. 1118-ல் சோழ நாட்டில் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்றுத் தன் தந்தைக்கு உதவி புரிந்து வந்தவன். கி.பி. 1120ஆம் ஆண்டில் முதற் குலோத்துங்க சோழன் இறக்கவே, இளவரசனாகவிருந்த இவ்விக்கிரம சோழன் அரியணையேறினான். இவன், குலோத் துங்கனுடைய நான்காம் புதல்வனாயிருந்தும் இளவரசு பட்ட மெய்தி இறுதியில் முடி சூட்டப்பெற்றமைக்குக் காரணம் இவன் தமையான்மார்களாகிய இராசராச சோழகங்கன் இராசராச மும்முடிச் சோழன், வீர சோழன் என்போர் தம் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே இறந்தமை எனலாம்.

சோழ மன்னர்கள் தம் ஆட்சிக் காலங்களில் மாறி மாறிப் புனைந்துகொண்ட இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டங்களுள் பரகேசரி என்ற பட்டத்தையே இவன் புனைந்து கொண்டு அரசாண்டான் என்பது கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது.

செங்கற்பட்டு ஜில்லாவில் சிவன்கூடல் என்னும் ஊரிலுள்ள கோயிலில் இவன் பிறந்த ஆனித் திங்கள் உத்திரட்டாதி நாள்முதல் ஏழு நாட்கள் திருவிழா நடத்துவதற்கு கி. பி. 1128-ல் நிலம் அளிக்கப்பெற்ற செய்தி அவ்வூர்க் கல்வெட்டொன்றில் காணப் படுகின்றது. எனவே, இவன் ஆனித் திங்களில் உத்திரட்டாதி’ நன்னாளில் பிறந்தவன் என்பது தெள்ளிது. தில்லை மாநகரில் 1. Ibid, 385 of 1912

2. பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் இவன் உத்திராடத்தில் பிறந்தவன் என்று கூறியுள்ளனர். (The Colas, Vol. II, p, 61) இது, சிவன்கூடற் கல்வெட்டில் காணப்படும் நாளோடு முரண்படுவதால் பொருந்தாதென்றுணர்க.