உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 அரசியல் தலைவர்; கருவுணாயகர் என்னும் இயற்பெயரும் அரையர், களப்பாள ராயர் என்ற பட்டங்களும் உடையவர். நெற்குன்றம் என்னும் ஊரைத் தமக்குரிய காணியாகக் கொண்டமை பற்றி நெற்குன்றங் கிழார் என்று வழங்கப் பெற்றவர். சிறந்த தமிழ்ப் புலமையும் சிவபத்தியும் வாய்க்கப் பெற்றவர். சோழ நாட்டில் திருப்புகலூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்பால் பெரிதும் ஈடுபட்டு திருப்புகலூரந்தாதி பாடிய கவிஞர் கோமான் இவரே யாவர். இவர் நம்பி காளியார் முதலான புலவர் பெருமக்களை ஆதரித்த பெருங் கொடை வள்ளல் என்பது அறியத்தக்கது. இவர் கல்வெட்டொன்று' திருப்புகலூரிலுள்ளது.

வீரைப்பரசமய கோளரி மாமுனிவர்

என்பார் கி.பி.1111, 1119-ஆம் ஆண்டுகளில் விளங்கியவர்; வீரை என்னும் ஊரினர்; பரசமய கோளரி என்ற பட்ட முடையவர். இவர் சைவ மடத்தின் தலைவராக நிலவிய ஒரு துறவியாவர். இவர் இயற்றிய நூல்கள் கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் என்பனவாம். இவற்றுள் கன்னிவன புராணம் என்பது திருப்பாதிரிப்புலியூர் புராண மாகும். தமிழிலுள்ள தலப் புராணங்களுள் இதுவே பழைமை வாய்ந்தது. இஃது இந்நாளில் கிடைக்கவில்லை.

2

1. Ins. No.96 of 1927 -28.

2. S.I.I., Vol. VII, Nos. 752 and 753.