உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




LO

5

இரண்டாம் பதிப்பின் முகவுரை

இவ்விலக்கிய வரலாறு 1955 ஆம் ஆண்டில் முதலில் வெளிவந்தது. இதனை யான் எழுத நேர்ந்தமைக்குரிய காரணத்தை முதற் பதிப்பின் முகவுரையில் தெரிவித்துள்ளேன். முதற்பதிப்புப் புத்தகங்கள் செலவாகிவிட்டமையாலும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இது பாடமாக வைக்கப் பெற்றிருத்தலாலும் இவ்விரண்டாம் பதிப்பு இப்போது விரைந்து வெளிடப்பட்டுள்ளது.

தனை இரண்டாம் பதிப்பாக வெளியிட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும் அன்புடன் ‘புரூப்’ திருத்தியுதவிய என் அரிய நண்பர் தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர் வித்வான் க. வெள்ளைவாரணர் அவர்கட்கும் எனது நன்றி உரியதாகும்.

அண்ணமாலை நகர்

4 - 7 - 55

ங்ஙனம்,

T. V. சதாசிவ பண்டாரத்தார்