உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7

தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250- கி. பி. 600)

பாண்டியரது தலைநகராகிய மதுரையம்பதியில் நடை பெற்ற கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திற்குப் பின்னரும் சைவ சமய குரவர்களாகிய திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தோன்றிய காலத்திற்கு முன்னரும் அமைந்த ஒரு காலப் பகுதியே தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்று கூறப்படும். அது, கி.பி. 250 முதல் கி. பி. 600 வரையில் அமைந்த ஒரு காலப் பகுதியாகும். மதுரையிலிருந்த கடைச் சங்கம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் முடிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ந்து கண்டதோர் உண்மையாயினும், அதுபற்றி அறிஞர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே, அதனை ஈண்டு ஆராய்வதும் இன்றி யமையாததொன்றாம்.

கடைச்சங்கத்தின் இறுதிக்காலம்

1

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில், பல்லவர் என்னும் ஓர் அரசர் மரபினர் தமிழகத்தின் வடபகுதியைக் கைப்பற்றிக் காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதியையும் வடக்கே கிருஷ்ணை என்ற பேராறு வரையிலுள்ள பகுதியையும் ஆட்சி புரியத் தொடங்கினர். அவர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியை வென்று கைப்பற்றிய போது சோழ மன்னரோடும் பிற சிற்றரசரோடும் நிகழ்த்திய போர்கள் பலவாதல் வேண்டும். அப்பல்லவரின் தமிழ்நாட்டுப் படையெழுச்சியையாதல் அவர்கள் தமிழகத்தில் நடத்திய போர்களையாதல் கடைச்சங்கப் புலவர்கள் தாம் இயற்றியுள்ள

1. Administration and Social Life under the Pallavas by Dr. C. Minakshi 2 and 6.

pp.