உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

-

17

திருக்குறளில் நட்பாராய்தல் என்னும் அதிகாரத்திலுள்ள ‘நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் -வீடில்லை நட்பாள் பவர்க்கு" என்ற குறள் வெண்பாவைக் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய கபிலர் 'பெரியோர் நாடி நட்பினல்லது – நட்டு நாடார்தம் மொட்டியோர் திறத்தே' (நற்றிணை, பா. 32) என்ற பாடலில் எடுத்தாண்டிருத்தல் காண்க. திருக்குறளில் கண்ணோட்டம் என்னும் அதிகாரத்திலிலுள்ள 'பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க - நாகரிகம் வேண்டு பவர்* என்ற குறள் வெண்பாவின் சொல்லையும் பொருளையும் கடைச் சங்கப் புலவர் ஒருவர், 'முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் - நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்” என்று நற்றிணைப் பாட லொன்றில் அமைத்துப் பாடியிருத்தல் அறியத்தக்கதாகும். திருக்குறளில் செய்ந்நன்றியறிதல் என்னும் அதிகாரத்திலுள்ள ‘எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை - செய்ந் நன்றி கொன்ற மகற்கு* என்ற குறள் வெண்பாவின் பொருளைக் கடைச்சங்கப் புலவராகிய ஆலத்தூர்கிழார்,

ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே யாயிழை கணவ

என்றும் புறநானூற்றுப் பாடலில் தெளிவாக விளக்கியிருப்ப தோடு ஆசிரியர் திருவள்ளுவனாரது திருக்குறளை அறநூல் என்று பாராட்டியிருப்பதும் உணரற்பாலதாம். நல்லிசைப் புலமை மெல்லியல் நங்கையாராகிய காக்கை பாடினியார் நச்செள்ளையார் தாம் பாடியுள்ள 'நரம்பெழுந்துலறிய நிரம்பா

1. திருக்குறள், நட்பாராய்தல், 1.

2. மேற்படி/கண்ணோட்டம், 10.

3. நற்றிணை, 355.

4. திருக்குறள், செய்ந்நன்றியறிதல், 10.

5. புறம்.34.