உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6

இனி, 'ஊனுண்டல்

2

செய்யாமை செல்சாருயிர்க்கு1 எனவும், 'இனிதுண்பானென்பான் உயிர்கொல்லா துண்பான்' எனவும், 'விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்ä எனவும், 'கொலைப்பாலுங் குற்றமேயாம்" எனவும் இவர் கூறி யிருப்பதை நோக்குமிடத்து, புலாலுண்ணாமை, கொல்லாமை ஆகியவை தலைசிறந்த இரு பேரறங்கள் என்பதும் அவை உலகில் என்றும் நின்று நிலவவேண்டும் என்பதும் இவரது உள்ளக் கிடக்கையாதலுணர்க. இவ்வாசிரியர் கூறி யுள்ள அறிவுரைகள் சில, என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளு தற்கு உரியனவாகும். அவை,

1. அல்லவை செய்வார்க் கறங்கூற்றம்

(பா.83)

2. வெல்வது வேண்டின் வெகுளிவிடல்

(பா.15)

3. தனக்குப்பாழ் - கற்றறி வில்லா வுடம்பு

(பா.20)

4. ஈன்றாளோ - டெண்ணக் கடவுளுமில்

(பா.55)

5. கொடுப்பின் அசனங் கொடுக்க

(பா.80)

6. யார்மாட்டும் - கொள்ளாமை வேண்டும் பகை

(பா.86)

7. தன்னொடு - செல்வது வேண்டின் அறஞ்செய்க (பா.15)

8. குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம்

(பா.81)

(பா.92)

9. வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம் 10. இந்நிலத்து - மன்னுதல் வேண்டின் இசைநடுக

என்பனவாம்.

(பா.15)

1. மேற்படி, பா.38.

2. மேற்படி, பா. 59.

3. மேற்படி, பா.26.

4. மேற்படி, பா. 59.