உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




vi

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-6

தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய சிந்தனை அறிஞர் கா.சுப்பிரமணியப் பிள்ளை 1930இல் எழுதி வெளியிட்ட இலக்கிய வரலாற்றில்தான் முழுமைப் பெறுகிறது எனலாம். இந்த நூலையடுத்துத் தமிழில் பல இலக்கிய வரலாற்று நூல்கள் வெளிவரத் தொடங்கின.

-

13,14,15ஆம்

கி.பி.1950-க்குப்பின் தமிழ் இலக்கிய வரலாறு படைப்பதில் புது ஊக்கம் பிறந்தது. அவ்வகையில் சு.இராமசாமி நாயுடுவின் 'தமிழ் இலக்கியம், தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரின் தமிழ் இலக்கிய வரலாறு கி.பி.250- 600', 'தமிழ் இலக்கிய வரலாறு நூற்றாண்டுகள்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப் பெறாத இருண்ட காலமாகிய களப்பிரர் கால இலக்கிய வரலாற்றை 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து' அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அறிஞர் பண்டாரத்தாரை எழுதுமாறு பணித்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் வடமொழியில் எழுதப் பெற்ற சில சைன நூல்களும், பாலி மொழியில் இயற்றப் பெற்ற சில பௌத்த நூல்களும், பிராகிருதத்திலும் வடமொழியிலும் வரையப் பெற்ற சில செப்பேடுகளும் உரையாசிரியர்களின் சில உரைக் குறிப்புக்களும் களப்பிரர் கால இலக்கிய வரலாற்றை எழுதுவதற்குப் பண்டாரத் தாருக்குத் துணை புரிந்தன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இருண்ட கால இலக்கிய லக்கிய வரலாற்றைத் தமிழுலகம் வியக்கும் வகையில் எழுதிய பெருமை பண்டாரத்தாருக்கு உண்டு.

அதுபோன்றே 13, 14. 15 ஆம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றைத் தமக்குக் கிடைத்த அகச் சான்றுகளையும் புறச்சான்றுகளையும் அடிப்படையாகக் கொண்டு, ஆதாரமற்ற கற்பனைச் செய்திகளை நீக்கி, சமயச் சார்பு பற்றி நடுவுநிலைமை மாறாமல் உண்மையை உணரும் உயர்ந்த நோக்குடன் அறிஞர் பண்டாரத்தார் எழுதியுள்ளார்.

ம்