உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணிந்துரை

அணிந்துரை

xi

க.குழந்தைவேலன்

21.12.2007

தமிழ்க்கல்வி, தமிழ் அறிவு, தமிழ்ப்புலமை என்பனவெல்லாம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிப்பது, பாப்புனையும் ஆற்றல் கைவரப்பெறுவது, எதுகை மோனைகளோடு எடுத்து மொழிவது, அடுக்குமொழிகளை அள்ளிவீசி அரங்கம் அதிர முழங்குவது என்பது பொருளன்று. அது தமிழ் மொழியை, அம் மொழி பேசும் மக்களின் வாழ்வியலை, வரலாற்றியலை, பண்பாட்டியலை, ஆழ அகலக் கற்றல், நாளும் வளர்ந்துவரும் அறிவியலை அறிதல், கற்றவற்றையும் அறிந்தவற்றையும் உணர்ந்து உலகியலோடு ஒட்ட ஒழுகி வாழ்ந்து காட்டல், தம் வாழ்க்கையையே பாடமாக்கித் தம் மக்களுக்குக் கற்பித்தல் என்பது பொருளாகும். அங்ஙனம் வாழ்வோரே தமிழ் கற்றோர் - தமிழ்ப்புலமையர் - தமிழாசிரியர் ஆவர். அதுவன்றித் தமிழ் கற்றோம், தமிழ்ப் புலமையோம் என்பனவெல்லாம் வெற்று ஆரவாரமேயன்றி வேறன்று.

அத்தகைய தமிழ் கற்றுவல்ல நல்ல தமிழாசிரியர்க்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த பேராசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆவர்.

அண்ணாமலையார்தமிழ்க்கென அமைத்த பண்ணார் பல்கலைக் கழகம்'

எனப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் ஒருகாலத்தில் பாராட்டப் பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி அப் பல்கலைக் கழகத்திற்கே பெருமை சேர்த்த பெருமையர். தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்த தகைமையாளர்.

கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் இணைந்த காலப்பகுதி வீழ்ச்சியுற்றுக் கிடந்த தமிழும்