உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணிந்துரை

XV

பண்டாரத்தார் பல்வேறு இதழ்களில் எழுதி வெளிவந்தவற்றில் சிலவற்றைத் தொகுத்துச் சற்றேறக் குறைய 47 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மகனாரால் 1) இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும், 2)கல்வெட்டுகளால் அறியப்பெறும் உண்மைகள் என இருநூல்களாக வெளியிடப்பட்டன. இவற்றைத் தமிழ் மக்கள் படித்துப் பயனுற வேண்டும் என்பதற்காக மீண்டும் அவை தமிழ்மண் அறக்கட்டளை வாயிலாக அவரது எல்லாப் படைப்புகளோடும் சேர்த்து ஒருசேர வெளியிடப்படுகின்றன.. இவற்றைப் படித்துணர்ந்து தமிழ் மக்கள் நம் அருமை பெருமைகளை அறிந்து உயர வழி காணவேண்டும். அறிஞர் பெருமக்கள், பண்டாரத்தார் காலத்தில் வெளிவராது இன்றுவரை வெளிவந்துள்ளனவும், வெளிவந்து கொண்டுள்ளனவுமான பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்களைக் கற்றுணர்ந்து அன்று போதிய சான்று கிடைக்காமையால் இன்று குறைபாடாகக் காணப்படும் அவரது வரலாற்று முடிவுகளின் குறைகளைக் களைந்து புதுக்க வேண்டுவதும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டு நம் நாட்டின் கலை பண்பாட்டு வாழ்வியல் வரலாறுகளை வெளிக்கொணர்ந்து தமிழர் வாழ்வும் வளமும் உலகறியச் செய்து நாம் உயர்வதும் நமது இன்றைய தலையாய கடனாகும். அப்பணியைத் தமிழ்மண் அறக்கட்டளையும் அதன்பால் பற்றுக் கொண்டோரும் செய்து முடிப்பர். செய்து முடித்தல் வேண்டும்.

1. சதாசிவப் பண்டாரத்தார் தி.வை. பிற்காலச் சோழர் சரித்திரம் முன்னுரை

2. மேற்படி

3. தமிழ் இலக்கிய வரலாறு 13,14,15 ஆம்நூற்றாண்டுகள்

4. அருணாசலம். முதமிழ் இலக்கிய வரலாறு