உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7

மெய்த்தகு மதலை வேண்டி விதர்ப்பகோன் பயந்தலோபா முத்திரை தனைமுன் வேட்டு முதுக்குறைத் திண்மைசான்ற சித்தனை யளித்த வள்ளல்

தென்றிசை நோக்கிச் சென்றான்."

என்ற கந்த புராணப் பாடலால் நன்கறியலாம்.

4. அகத்தியனார் தமிழ் நாட்டில் புரிந்த செயல்கள்

பண்டைக் காலமுதல் சோழவளநாடு ‘சோறுடைத்து’ என்று பாராட்டப் பெற்றுவருகின்றது. அதற்குக் காரணம், அந்நாடு வானம் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரியால் வளம்பெற்றுச் சிறப்பெய்தியிருப்பதுதான். அதுபற்றியே அந்நாடு காவிரிநாடு எனவும், பொன்னிநாடு எனவும் அறிஞர்களால் புகழப் பெற்றுள்ளது. அத்தகைய பெருமை வாய்ந்த காவிரியாறு, அகத்தியர் தென்னாட்டிற்கு வந்து, மேற்குத் தொடர்ச்சி மலையாகிய இமயமலையில் தங்கியிருந்த காலத்தில் காந்தன் என்ற ஒரு சோழ மன்னன் வேண்டிக் கொண்டவாறு இம்முனிவரது அரும்பெரு முயற்சியினால் தான் வெட்டப் பெற்றது என்பது அறியற்பாலதாம். அகத்தியர் கங்கையாருழைச் சென்று காவிரி யாரை வாங்கிக் கொண்டு வந்தார் என்று ஆசிரியர் நச்சினார்க் கினியர் கூறியிருப்ப இவ்வரலாற்றையே குறிப்பாக உணர்த்து வதோடு தென்னாட்டில் ஓடுங் காவிரியாறு வடநாட்டிலுள்ள கங்கையைப்போல் பெருமையும் சிறப்பும் வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்துவது ஆகும். அன்றியும் புலவர் பெருமானாகிய மதுரைக் கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் தாம் இயற்றிய

மணிமேகலையில்,

66

செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளங்குங்

கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட

அமர முனிவன் அகத்தியன் தனாது

கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை.

என்று இவ்வரலாற்றைச் சிறிது வேறுபடக் கூறியுள்ளமை நோக்கத்தக்கது. எனினும், அகத்திய முனிவர்க்கும் காவிரியாற்றிற்கு