உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

25

கற்றிருத்தல் வேண்டும் என்பது அறியக் கிடக்கின்றது. பழனித்தல புராணமும் இதனை வலியுறுத்தல் காண்க.

பௌத்த சமயத்தினரான பொன்பற்றிக் காவலன் புத்தமித்திரன் என்பார், தாம் இயற்றிய வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கணத்தில் அகத்தியர் அவலோகி தன்பால் தமிழ் கேட்டனர் என்று கூறியுள்ளனர். அச் செய்தியை

66

ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமிழ்.'

என்ற பாடற் பகுதியால் நன்கறியலாம்.

இவற்றால் அகத்தியர்க்குத் தமிழறிவுறுத்திய ஆசிரியர் யாவர் என்பதுபற்றி நம் தமிழ்நாட்டில் அக்காலத்தில் வழங்கிய சில செய்திகள் வெளியாதல் காண்க.

3. அகத்தியனாரின் இல்லக்கிழத்தியாரும் புதல்வரும்

அகத்தியரின் மனைவியார் உலோபமுத்திரையார் ஆவர். இவ்வம்மையார் புலத்திய முனிவரின் தங்கையார் என்றும் அவர் கொடுப்ப, இவர் தமிழ்நாடு போதருங்கால் மணம் புரிந்து கொண்டு வந்தனர் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளமை முன்னர் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. கந்தபுராணத்துள் அகத்தியப் படலத்தில் இவ்வுலோபமுத்திரை யார் விதர்ப்ப நாட்டு மன்னன் ஒருவனுடைய புதல்வியார் என்று சொல்லப் பட்டிருக்கின்றது. இத்தகைய வேறுபாடுகள் எல்லாம் அவ்வரலாறுகளின் பழமையையே வலியுறுத்துவனவாகும். காலஞ் செல்லச் செல்ல வரலாறுகள் சிறிது வேறுபட்டும் புனைந்துரை வகையாற் பெருகிக் கொண்டும் போதல் இயல்பேயாம்.

இனி, அகத்தியர்க்கு உலோபமுத்திரையார் பால் மெய்யறிவு வாய்ந்த புலவர் ஒருவர் பிறந்தனர் என்றும் அவர்க்குச் சித்தர் என்னும் பெயரிடப்பெற்றது. என்றும் கந்தபுராணம் கூறுகின்றது. இச் செய்திகளை,

66

அத்தனங் கொருவ அன்னான் அருளடைந் தங்கணீங்கி