உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7

பிறகு இராவணனை இசையில் வென்று அவனைச் சார்ந்தோர் அப் பக்கங்களில் இயங்காதவாறு செய்து விட்டனர் என்றும் நச்சினார்க்கினியர் அவ்வுரைப் பகுதியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாம்.

2. அகத்தியனார்க்குத் தமிழ் அறிவுறுத்திய ஆசிரியர்

அகத்தியர் இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டிற்குப் புறப்படுங்கால், தென்னாடு தமிழ்மொழி வழங்கும் நாடு என்றும் அங்குள்ள மக்கள் அம்மொழியில் வல்லவர்கள் என்றும் அவர்கள் கேட்பவற்றிற்குத் தாம் விடை கூறுதல் வேண்டும் என்றும் ஆதலால் தமக்குத் தமிழ் இலக்கணத்தை அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறினராம். இறைவனும் இவர் வேண்டிய வாறு இவர்க்கு அவ்விலக்கணத்தைக் கற்பித்தனர் என்று திருவிளையாடற் புராணம் உணர்த்துகின்றது. இவ் வரலாற்றால் சிவபெருமானே அகத்தியர்க்கு முதல் ஆசிரியர் என்பது நன்கு புலப்படுதல் காண்க. காஞ்சிப் புராணமும் இங்ஙனமே கூறுவது நோக்கற்பாலது.

கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பரும் இராமாயணத்துள் அகத்தியப் படலத்திலுள்ள

66

உழக்குமறை நாலினும் உயர்ந்துலக மோதும்

வழக்கினு மதிக்கவியி னும்மரபி னாடி

நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண்

தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்.”

என்ற பாடலில் சிவபெருமான் அகத்தியர்க்குத் தமிழ் அறிவுறுத்திய செய்தியைக் குறிப்பிட்டிருத்தல் உணரற்பாலதாம்.

இனி, தொல்காப்பியப் பாயிர விருத்தியில் ஆசிரியர் சிவஞான முனிவர் 'தமிழ்நாட்டிற்கு வடக்கட் பிற எல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்; அகத்தியனார்க்குத் தமிழைச் செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி என்பது' என்று கூறியுள்ளனர். இதனால், அகத்தியர் குன்றமெறிந்த குமரவேலிடத்தும் ஒரு காலத்தில் தமிழ் இலக்கணம்