உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

23

இனி, அகத்தியனார் தென்றிசைக்கு வந்த வரலாற்றைத் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரவுரையில் ஆசிரியர் நச்சினார்க் கினியர் கூறியுள்ளனர். அது 'தேவரெல்லாருங்கூடி யாம் சேர இருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர் என்று அவரை வேண்டிக் கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கை யாருழைச் சென்று காவிரியாறை வாங்கிக் கொண்டு பின்னர் யமதங்கியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினி யாரை வாங்கிக் கொண்டு புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிலின்கண் இருந்து, இராவணனைக் கந்தவருவத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கினர் என்பதாம். அகத்தியனாரைப் பற்றித் தமிழ்நாட்டில் தம் காலத்தில் வழங்கிவந்த செய்திகள் சிலவற்றையே ஆசிரியர் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பியப் பாயிர உரையில் இவ்வாறு குறிப்பிட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, இத் தமிழ் முனிவரைப் பற்றிய செய்திகள் நம் தமிழகத்தில் அந்நாளில் யாண்டு பரவியிருத்தன வாதல் வேண்டும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ள அகத்தியனார் வரலாற்றில் சிவபெருமான் திருமணம் சொல்லப் படவில்லை; எனினும், வடதிசையின் தாழ்வு நீங்க இவர் தென்னாடு போந்தமையும் வேறு சில செய்திகளும் அதில் கூறப்பட்டிருத்தல் அறியத்தக்கது.'

இம் முனிவர்பிரான், தென்றிசை வந்தபோது காவிரியைக் கொணர்ந்தனர் என்று சமதக்கினி முனிவர் புதல்வர் திரண தூமாக்கினியாரை அழைத்து வந்தனர் என்றும் புலத்திய முனிவரின் தங்கையார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப மணந்து வந்தனர் என்றும் திருமால் வழியினரான அரசர் பதினெண்ம ரோடு பதினெண்குடி வேளிரையும் அழைத்து வந்து காடுகளை யழித்து நாடாக்கிப் பொதியிலின் கண் இருந்தனர் என்றும்