உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


இறுதியாய் அமைந்த ஆத்திரையர் பேராசிரியர் - தொல்காப்பியப் பொதுப் பாயிர விருத்தியைப் பதிப்பித்து அதனைக் காத்துள்ளார். ஏனெனில், அவர்க்குக் கிட்டிய சுவடி ஒன்றே ஒன்று கொண்டு பதிப்பிக்கப் பட்டதாம்

தமிழகவரலாற்றுலகில் தடம் பதித்த சதாசிவனார், அப்பதிவால் என்றும் வாழ்வார்!

இதுகால் பெருமக்கள் அறிவாக்கம் நாட்டுடைமைப் பொருளாக்கப்படுதல் என்னும் நன்னோக்கால், பொதுமை பூத்துப் பொலியும் வளமாக வெளிப்படுகிறது. அவ்வெளிப் பாட்டைச் செய்பவர், தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனர் திருமலி கோ.இளவழகனார். தமிழ்மண், தமிழ்மொழி, தமிழ் இனம் என்னும் முக்காவல் கடனும் முறையாக ஆக்குவதே நோக்காகக் கொண்டவர் இப்பெருமகனார்! தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் தம் முழுதுறு படைப்புகளையும் தமிழுலகம் கூட்டுண்ண வழங்கும் இத்தோன்றல், தொண்டு வழிவழிச் சிறப்பதாக!

இன்ப அன்புடன்
இரா. இளங்குமரன்