உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

xiii


மதிப்பு அடைச் சொல்லாகிய திருவாளர் என்பதை முதலில் எழுதத் தொடங்கி வழக்கத்திற்குக் கொண்டு வந்தவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரே என்கிறார் (215). இது பழ முறையே என்பதையும் கல்வெட்டுச் சான்றால் நிறுவுகிறார் (215).

காயங்களால் இனிய சுவைத்தாக்கி உண்டல் (திருக். 253 பரிமே). என்பதால் இனிய சுவை கொடுப்பவை காயங்கள் என்பதை அறியலாம். இக் காயங்கள் ஐந்து என்பதை, காயம் மிளகமுது, மஞ்சளமுது, சீரகவமுது, சிறுகடுகமுது, கொத்தமலி அமுது என்றுகல்வெட்டால் தெளிவிக்கிறார் (217) இந்நாளில் காயம் என்பது பெருங்காயம், ஈரவெண்காயம், வெண்காயம் என வழக்கில் உள்ளமை அறிவோம்.

புறநாட்டுப் பொருள்கள் என்னும் முப்பத்தெட்டாம் கட்டுரையில், வெற்றிலை (மலேசியா), சர்க்கரை (சீனம்) மிளகாய் (அமெரிக்கா) கத்தரிக்காய் (அமெரிக்கா), காப்பி (அரேபியா), தேயிலை (சீனம்) உருளைக்கிழங்கு (அமெரிக்கா) புகையிலை (அமெரிக்கா) என்பவற்றை விளக்கியுரைக்கிறார்.

வெற்றிலை = வெறு + இலை; சமைத்தற்குப் பயன்படாத இலை என்பது இதன் பொருள் என்கிறார். காய்த்தல் இல்லாத வெறு இலை 'வெற்றிலை' ஆகும். அதனை வெற்றி இலை என்பதோ, அவியாமல் வெறுமனேதின்பது என்பதோ பொருந்துவன வல்ல.

ஒருவர்க்குரிய விருதுகளைப் பாருங்கள் (77)!

ஏகாரத்தின் பின் 'ய்' வருதலைச் சுட்டுகிறார்; ஆய்தற்குரியது என்கிறார் (84) ‘மழவர் வரலாறு‘ தமிழ்ப் பொழிலில் துணர்1, மலர் 1, துணர் 2, மலர் 1, 2 ஆகியவற்றில் வெளிவந்துளது (1925- 1926) கட்டுரை, 'தொடரும்' தொடர்கிடைத்திலது! ஆயினும் என்றுளது.

1914 இல் இருந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகளில் வெளிவந்த கட்டுரைகள் இவை,

அக்கால நிலையினும் வரலாறு பலவகையாலும் தெளிவு பெற்றுள்ளமையை அறியலாம். ஆயினும், இத்தொகுதியின் பங்களிப்பு அத்தெளிவுக்குப் பெரிதும் உதவுகின்றது.