உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

137


மாத்திரங் குறிப்பதுபோல், பண்டைக்காலத்திற் 'பட்டின மென்பது காவிரிப் பூம்பட்டினத்தையே குறித்ததாகலின் மேற்கூறிய இருபுராணங்களும் இவ்விஷயத்தில் முரணவில்லை யென்பதேயாம். இனி இவர்கள் கூற்றை யங்கீகரித்துக் கொண்டு, வேறுநூல்களில் இதைப்பற்றி ஏதாவது சொல்லப்பட்டிருக் கிறதா வென்பதை யாராயுங்காற் சிலப்பதிகாரமும் (அம்மங்கை பிறந்தநகரம்) காவிரிப்பூம்பட்டின மென்று கூறுவதாக வெளியா கின்றது.[1] இதனால் அம்மங்கை பிறந்த நகரம் காவிரிப் பூம்பட்டினமென்பது நன்கு புலனாகின்றது.

இதுகாறும் என் சிற்றறிவுக்கெட்டியவரை யான்செய்த ஆராய்ச்சியால், திருவிளையாடற் புராணத்திலும் திருத் தொண்டர் புராணத்திலும் கூறப்படுஞ்சரிதங்களிரண்டும் வெவ்வே றென்பதும், திருஞானசம்பந்தசுவாமிகள் அரவாலிறந்த வணிகனுக்கு ஆருயிரளித் தருளினாரென்று திருவிளையாடற் புராணங்கூறுவது ஆராய்ச்சியிற் சிறிதும் பொருந்தவில்லை யென்பதும், புறம்பயத்துறையிறைவனே அங்ஙனஞ் செய்தருளினாரென்று திருப்புறம்பயபுராணங்கூறுவதே வன்மையுடைத் தென்பதும், மன்றற்குக்காட்டப்பட்ட சான்றுகள் மடைப்பள்ளியுடன் நான்கென்பதும், அவ்வணிகமாதுபிறந்தநகரம் காவிரிப் பூம்பட்டினமென்பதும் விளங்கி நிற்றல் காண்க.

  1. சிலப்பதிகாரம் வஞ்சினமாலை 5 முதல் 36 வரை. (அடிகள்)