உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138




24. திருவள்ளுவரும் ஞானவெட்டியும்

நமது தமிழகஞ்செய்த தவப்பயனாகத் தோன்றித் திருக்குறளெனும் தெய்வப்பனுவலையருளிய ஆசிரியர் திருவள்ளுவனாரின் அருமை பெருமைகளை யறியாதார் மிகவுஞ் சிலரேயாவர். இப்பெரியார் அருளிய திருக்குறளை, அதுதோன்றியநாண் முதல் எம்மதத்தினரும் தம்மதத்திற்குரிய நூலென்று கூறி வருவதுடன், தமிழ்மொழிவழங்காப் பிறதேயத்தினரும் அதனை நன்கு படித்துத் தத்தம்பாஷைகளில் மொழிபெயர்த்து மிகப் பாராட்டியும் வருவாராயினர்.

இம்மகானது தெய்வப்புலமையையும் இவரருளிய நூலினருமையையும் நன்குணரப்பெறாத மாந்தர்சிலர், இற்றைக்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் இயற்றப்பட்டு வெளிவந்துள்ள "ஞானவெட்டி" யென்னும் நூலைக் கண்டு மயக்கமுற்று இந்நூலியற்றினோரும் திருக் குறளருளிய திருவள்ளுவனாரென்றே உண்மையறியாமற் கூறிவருகின்றனர். அன்னோர் கூற்று வலியுடைத்தாவென்பதை யீண்டாராய்வாம்.

ஞானவெட்டியின் ஆசிரியர், ஆரியத்திலும் தமிழிலும் ஒப்பற்ற புலமையும் தெய்வத்தன்மையும் வாய்ந்த சில பெரியோர்களையும், அன்னோர் நம்மவர்கட்குப் பெரிதும் பயன்படும் வண்ணம் இயற்றியருளிய நூல்களையும், பொறாமை செருக்காதி குறும்புகள் விளைப்பதாய் முக்குணக்கடைநிற்குந் தாமதக்குணச் சேட்டையாலோ அன்றிப் பிறிதென்கொண்டோ, தம்நூலில் வாய்கூசாது நிந்தித்திருக்கின்றனர். அச்செய்யுட் களைக் கீழே தருகின்றோம்.

வியாசர்சொல்லும்பாரதத்தில் வெகு பொய்வீணாம்
      மேதினியோர் மாய்கையினில்விருப்பஞ் சொன்னார்
ஆய்ந்துகளி பாடிவிட்டான் கம்பன்வம்பன்
      அதீதராமாயணத்தில் நேகம் பொய்தான்