உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159



28. சோழர்களும் தமிழ் மொழியும்

நாளது வெகுதானிய, ஐப்பசி, எ. (23-10-38)ம் நாள் ஞாயிறு மாலை ரு மணிக்குக் கரந்தைத் தமிழ்ப் பெருமன்றத்தில் கும்பகோணம் வாணாத்துறை உயர்தரப்பள்ளித் தலைமைத் தமிழாசிரியர், புலவர் திருவாளர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் “சோழர்களும் தமிழ் மொழியும்“ என்பதுபற்றி ஓர் அரிய விரிவுரையாற்றினார்கள். அவர்கள் ஆற்றிய விரிவுரையின் சுருக்கம் வருமாறு:-

“சோழர்கள் தமிழ்ப் பழங்குடியினர், தமிழைப் போன்று சிறப்பு “ழ” கரம் பெற்ற பெயருடையவர். இவர் தம் தொன்மைக் கால எல்லை காண்டலரிது. பழந்தமிழிலக்கண நூலாசிரியரான தொல்காப்பியனாரே, “வண்புகழ் மூவர்தண் பொழில் வரைப்பின்”, “போந்தை வேம்பே ஆரென வரூஉ மாபெருந் தானையர்“ என்ற சூத்திரங்களால் இச்சோழ வரசர்களையும் அவர்தம் மாலையாகிய ஆத்தியினையும் குறிப்பிட்டுள் ளார். இவர்கள் தமிழைப் போற்றுவதிற் பாண்டியரின் பிற்பட்டவரல்லர். புலவர் புலமையறிய அரசரும் புலவராதல் வேண்டும். பாண்டியருட் கவியரங்கேறினாரைப் போன்று சோழரும் புலமை பெற்றிருந்தனர். கடைச்சங்கநாளிற் றொகுக்கப் பெற்ற தொகைநூல்களில் சோழன் நலங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நல்லுருத்திரன் முதலிய சோழ மன்னர்களாற் பாடப்பெற்ற பாக்கள் பலவுள. கற்றறிந்தா ரேத்துங் கலித்தொகையுள் முல்லைத் திணையைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் ஆவார். “படையும் கொடியு“ மென்ற தொல்காப்பியச் சூத்திரத்துள் வேந்தரது பூவைப் போர்ப்பூ, தார்ப்பூ என இருவகையாகப் பிரித்து சோழரது போர்ப்பூ ஆத்தியெனவும் அவரது தார்ப்பூ முல்லை யெனவும் கூறுவர். அதனுரையாசிரியரான பேராசிரியர். அத்தகைய தர்ப்பூவாகிய முல்லைப் பூ பயின்றது கருதி இவ்வரசர் முல்லைத்