உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


6. இளங்கோவடிகள் குறித்துள்ள
பழையசரிதங்கள்

இளங்கோவடிகளென்பார் இன்றைக்கு 1800 ஆண்டுகட்கு முன்னர்ச் சேரநாட்டில் வஞ்சிநகரத்திலிருந்து ஆட்சி புரிந்த சேரன்செங்குட்டுவனது தம்பியாவர். மிக்க இளம் பருவத்தி லேயே துறவுபூண்டு, அவ்வாச்சிரமத்திற் கேற்ப வொழுகிவந்த இவ்வடிகள், உலகத்திற்குப் பயன்படும் வண்ணம், தாமியற்றி யருளிய சிலப்பதிகாரம் என்னும் நூலின் கண் நமது புராணேதி காசங்களிற் சொல்லப்படுவனவும் பிறவுமாய் சில அருமை வாய்ந்த பழையசரித்திரங்களைச் சமயம் வாய்த்தபோதெல்லாம் ஆங்காங்குக் குறித்திருக்கின்றனர். பண்டைக் காலங்களிலியற்றப் பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாயதும், யாவராலும் புகழ்ந்து போற்றப் பெற்றதுமாய் சிலப்பதிகாரத்திற் கூறப் படுஞ்சரித்திரங்கள் நமது புராதனசரித்திர ஆராய்ச்சியிற் புகுந்துள்ள அறிஞர் பலர்க்கும் பெரிதும் பயன்படுமென்று கருதி, அவற்றை முறையே ஈண்டுத் தொகுத்தெழுதுகின்றேன்.

1. மனுநீதிகண்டசொழன், தனது அரும்பெறற் புதல்வனைத் தேர்க்காலிலிட்டது.

வாயிற்கடைமணிநடுநாநடுங்க
வாவின் கடைமணிபுகுநீர் நெஞ்சுசுடத்தான்ற
னரும்பெறற் புதல்வனையாழியின் மடித்தோன்;-
                        (சிலப். வழக்குரைகாதை 53–55)

...........முன்வந்த
கறவைமுறை செய்தகாவலன்காணம்மானை
காவலன் பூம்புகார்பாடேலோரம்மானை:-
         (வாழ்த்துக்காதை - அம்மானைவரி 2)