உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


2. சிபிச்சக்கரவர்த்தி, தன்பாலடைக்கலம்புக்கதொரு புறாவின் நிமித்தம் தன்னுடம்பையரிந்து கொடுத்தது.

எள்ளறு சிறப்பினிமையவர்வியப்பப்
புள்ளுறு புன்கண்டீர்த்தோன்; (வழக்குரைகாதை51-52)

புறவுநிலை புக்குப் பொன்னுலகமேத்தக்
குறைவிலுடம்பரிந்த கொற்றவன் யாரம்மானை குறைவிலுடம்பரிந்தகொற்றவன் முன்வந்த
கறவைமுறைசெய்தகாவலன்காண்:-
                     (வாழ்த்துக்காதை - அம்மானைவரி2)

குறுநடைப்புறவினெடுந்துயர்தீர
வெறிதருபரிந்தினிடும்பைநீங்க
வரிந்துடம்பிட்டோன றந்தரு கோலும்-
                         (நீர்ப்படைக்காதை 166-168)

3. உக்கிரகுமாரபாண்டியன்.தேவேந்திரன்பூட்டிய ஆரத்தைப் பூண்டது.

திங்கட் செல்வன்றிருக்குலம் விளங்கச்
செங்கணாயிரத்தோன்றி றல்விளங்காரம்
பொங்கொளிமார்பிற்பூண்டோன்வாழி:-
                              (நாடுகாண்காதை23-25)

கோவாமலையாரங் கோத்தகடலாரந்
தேவர்கோன்பூணாரந் தென்னர் கோன்மார்பினவே:
                  (ஆய்ச்சியர்குரவை, உள்வரிவாழ்த்து1)

வானவர்கோனாரம்வயங்கிய தோட்பஞ்சவன்தன்
மீனக்கொடிபாடும்பாடலேபாடல்:-
                      (வாழ்த்து- வள்ளைப்பாட்டு2)

4. உக்கிரகுமாரபாண்டியன், தன்கைவளையால் இந்திரன் முடியையுடைத்ததும், மேகத்தைச் சிறைப்படுத்தியதும்.

முடிவளையுடைத் தோன்முதல்வன் சென்னியென்
றிடியுடைப் பெருமழையெய்தாதேகப்
பிழையாவிளையுட் பெருவளஞ்சுரப்ப
மழைபிணித்தாண்டமன்னவன் வாழ்கென:-
                              காடுகாண்காதை 26.29)