உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

33


வச்சிரத்தடக்கையமார்கோமான் உச்சிப்பொன்முடியொளிவளையுடைத்தகை
                   (கட்டுரைகாதை 50-51)
                    ....கொற்றத்
திடிப்படைவானவன் முடித்தலையுடைத்த
தொடித்தோட்டென்னவன்கடிப்பிடுமுரசே:
       (ஆய்ச்சியர்குரவை- படர்க்கைப்பரவல்3)

5. குலசேகரபாண்டியன், தன்கைகுறைத்தது.

உதவாவாழ்க்கைக்கீரந்தைமனைவி புதவக்கதவம்புடைத்தனனோர்நா ளரசவேலியல்லதியாவதும்
புரைதீர்வேலியில்லென மொழிந்து
மன்றத்திருத்திச் சென்றீரவ் வழி
யின் றவ் வேலிகாவா தோவெனச் செவிச்சூட்டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சஞ்சுடுதவினஞ்சி நடுக்குற்று வச்சிரத்தடக்கையமரர் கோமான் உச்சிப்பொன்முடியொளிவளையுடைத்தகை
குறைத்த செங்கோற்குறையாக்கொற்றத்
திறைக்குடிப்பிறந்தோர்:-
                 (கட்டுரைகாதை42-53)

6. வானத்தின்கண்ணசைந்து கொண்டிருந்த மூன்றுமதில் களைச் சோழனொருவன் அழித்தது.

........உயர்விசும்பிற்
றூங்கெயில்மூன்றெறிந்த சோழன்காணம்மானை சோழன்புகார் நகரம்பாடேலோரம்மானை:-
         (வாழ்த்துக்காதை- அம்மானைவரி1)

வெயில்விளங்குமணிப்பூண்விண்ணவர் வியப்ப வெயின்மூன்றெறிந்தவிகல் வேற்கொற்றமும்:
               (நீர்ப்படைக்காதை 164-165)