உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

v





அணிந்துரை

இரா. இளங்குமரன்

திருவள்ளுவர் தவச் சாலை
திருவளர்குடி (அஞ்சல்)

அல்லூர், திருச்சிராப்பள்ளி - 620101

தமிழக வரலாற்றொடு வாழ்பவர்

வரலாற்றுப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், தொடக்க நாள்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, இந்த ‘ஆய்வுக் கட்டுரைகள்' என்னும் நூல்.

சோழர் குடி என்பது முதல் புறநாட்டுப் பொருள்கள் என்பது ஈறாக முப்பத்தெட்டுக் கட்டுரைகளையும், ”ஆத்திரையர் பேராசிரியர் அருளிய தொல்காப்பியப் பொதுப்பாயிரம் மூலமும் உரையும்” என்னும் குறுஞ்சுவடியையும் கொண்டது இத்தொகை நூலாகும்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வெளிவந்த இதழ்கள், மலர்கள், பற்றிய இணைப்பும் உள்ளமை ஆய்வுப் பயன் செய்வதாம். பின்னாளில் ஆசிரியர் இயற்றிய சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு முதலிய நூல்களுக்கு மூலமாகவும் முன்னாகவும் அமைந்த கட்டுரைகள் இவை. வரலாறு என்பது மெய்ச்சான்று கொண்டே நடையிடுவது. இட்டுக்கட்டும் வேலை வரலாற்றில் இடம் பெறின் மெய்மம் அழிந்துபோம்! வரலாற்றில் காலக்குறிப்பு என்பது தலைப்பட்டது. தொடர்ந்த ஆண்டுமுறை கொள்ளாமல், அரசர் ஆட்சியாண்டு கொண்டே கணிக்க வேண்டிய இடர் உடையது.

அன்றியும், ஒருவேந்தர் பெயரே, பின்வரும் பலர் பெயரா குங்கால், அவர்களுள் இவர் எத்தனாமவர் எனக் காணலில் உண்டாம் அரும்பாடு! நூல் தொகுப்பு மட்டுமே முழுதுறு