உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


ஆய்வுக்குச் சாலும் என்னும் நிலைமை இன்றிக், கோயில் கல்வெட்டு, அதன் சூழல், அகழ்வு ஆய்வு, மக்கள் வழக்கு என்பனவெல்லாம் புதைபொருள் கண்டெடுத்துக் காட்சிக்கு வைப்பது போன்று கவனமாகவும் கடமையுணர்வோடும் செய்ய வேண்டும். கவின் மிக்கதும் கடினமானதுமாம் ஆக்கப்பணியாதல்! இவற்றிலெல்லாம் ஆழங்கால் பட்டவர் ஆசிரியர் என்பதும், அவர் எவ்வாறு தம் தாழா முயற்சியாலும், தனித்திறத்தாலும் பின்னைப் பெருநூல்களின் படைப்புகளுக்குத் தம்மை ஆட்படுத்தி வளர்ந்தார் என்பதற்குச் சான்றாகி வழிகாட்டுவதுமாகிய நூல் இஃதாம்.

"கோவந்த புத்தூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்கும் பொருட்டு ஒரு சிவராத்திரியில் அவ்வூர்க்குச் சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள திருக்கோயில் பல கல்வெட்டுக்கள் நிறைந்த பழைமை வாய்ந்த கற்றளியாகக் காணப்பட்டது. அக்கல்வெட்டுக்களுள் இரண்டைப் படித்துப் பார்த்தபோது, அத்திருக்கோயில் விசயமங்கலம், விசயமங்கை என்ற பெயருடையதென்பது வெளியாயிற்று. எனவே கோவந்தபுத்தூரிலுள்ள அத்திருக்கோயில் திருவிசயமங்கை என்னும் பெயருடையதென்று நன்குணரப்பட்டது. பிறகு அத்தலத்திற்குரிய தேவாரப்பதிகங்களையும் பெரியபுராணத்தையும் ஆராய்ந்தபோது கல்வெட்டுக்கள் உணர்த்திய அவ்வரிய செய்தி அவற்றால் பெரிதும் உறுதி யெய்திற்று. பின்னர் இத் திருக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களை எழுதி வந்து வெளியிட வேண்டும என்ற விருப்பத்துடன் காலங்கருதிக் கொண்டிருந்தேன். சென்ற கோடை விடுமுறையில் சில நண்பர்களுடன் அவ்வூர்க்குச் சென்று ஒரு நாள் முழுவதும் தங்கிச் சில கல்வெட்டுக்களை எழுதி வந்தேன். வரலாற்று ஆராய்ச்சியாளர்க்குப் பயன்படும் என்று கருதி அவற்றை இதுபோது வெளியிடலானேன்' என்று தாம் வரலாற்றுத் தொகுப்பில் ஈடுபட்ட முறையை வெளியிடுகிறார். (பக்.70-71) (தமிழ்ப்பொழிலில் வந்த கட்டுரை: ஆண்டு 1931)

"சென்ற ஆண்டில் திருப்புறம்பியத்திலுள்ள சிவாலயத்தில் காணப்படும் கல்வெட்டுக்களுள் சிலவற்றை யான் எழுதிவந்த போது மூன்று கல்வெட்டுக்களில் ‘விரையாக் கலி' என்று குறிக்கப் பெற்றிருத்தலைக் கண்டேன்" (92) என்றும், "சேய்ஞலூர் மிழலை