உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


7.முதற்கண்டராதித்த சோழதேவர்

இவ்வரசர்பெருமான் சோணாட்டில், தஞ்சையில் வீற்றிருந்து அரசு புரிந்த சோழமன்னர்களுள் ஒருவர்: முதற்பராந்தக சோழ தேவரது இரண்டாவது புதல்வர் இவரது தமையனாராகிய இராஜாதித்தன் என்பார் தக்கோலத்தில், கி.பி.949-இல் இரட்ட அரசனாகிய கன்னா தேவனோடு புரிந்த பெரும்போரில் இறந்தமையின், பராந்தகசோழ தேவருக்குப்பின்னர் இவர் சோழமண்டலத்தின் அரசராக அரியணையேறினர். அப்போரின் பயனாக, பகைவனாகிய கன்னாதேவன் சோழ மண்டலத்தின் வடக்கிற் சில பகுதிகளைக் கவர்ந்து கொண்டமையின் எஞ்சியவற்றையே கண்டராதித்தர் ஆண்டுவந்தார்.

சோழமன்னர்கள் ஒருவர்பின் ஒருவராகத் தரித்துக் கொண்டு வந்த இராஜகேசரி, பரகேசரி என்றபட்டங்களுள் இவர் இராஜகேசரியென்னும் பட்டம் புனைந்தவர். கண்டராதித்தச் சதுர்வேதிமங்கலம் என்ற ஒரு நகரத்தைக் காவிரியின் வடகரையில் இவர் தம்பெயரால் அமைத்தாரென்று லேய்டன் நகரச் செப்பேடுகள் கூறுகின்றன. அதுவே, இப்போது திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள கண்டாரதித்தம் என்ற ஊர்போலும்.

இவர் தமிழ்மொழியிற் சிறந்த புலமையும் சிவபெருமானிடத்துப் பேரன்பும் வாய்ந்தவரென்பது இவர் பாடியுள்ள திருவிசைப்பாவினால் தெரிகிறது. திருவிசைப்பாவில் இவர் பாடியபதிகங்கள் பல இருத்தல்வேண்டும். ஆனால், தற்காலத்திலுள்ளது ‘மின்னாருருவ மேல்விளங்க'என்னும் தொடக்கத்துக் கோயிற்பதிகம் ஒன்றே. அப்பதிகத்தின் எட்டாவதுபாடலில், 'வெங்கோல் வேந்தன்றென்னாடுமீழங் கொண்டதிறற் - செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன்' என்று தம்