உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


ஒன்றாக விருந்ததென்பதை அப்பெயரியாரது செந்தமிழ்ப் பாடல்கள் கொண்டு இனிது விளக்கினேம். ஆனால், சங்கத்துச் சான்றோர்கள். இயற்றியுள்ள தொகைநூல்களில் காணப்பெறும் பாடல்களால் இந்நாடு சேரநாட்டின் ஒருபகுதியையும் கடைச் சங்க நாளில் தன்னகத்து அடக்கிக் கொண்டிருந்தமை நன்கு பெறப்படுகின்றது. ஆகவே, மழநாடு சேரநாட்டின் கீழ்ப் பகுதியையும் சோழநாட்டின் மேற் பகுதியையும் தன்பால் அடக்கிக்கொண்டு. பண்டைக் காலத்தில் ஒரு பெரிய நாடாகவே இருந்துள்ளது. இதனால் இந்நாட்டில் வசித்துவந்த மழவர் குடியினர் தமிழகத்தில் பழைய மக்களே யன்றி இடைக்கண் இங்குக்குடியேறிய வரல்ல ரென்பது நன்கு விளங்குதல் காண்க.

தற்காலத்தே நமது இந்தியப்படைஞரில் சீக்கியரும் கூர்க்கரும் சிறந்த வீரராயிருத்தல்போல இம்மழவர் குடியினர் பண்டைக்காலத்திய போர்வீரர்களில் சிறந்து விளங்கியவராவர். இன்னோர் இத்தகைய சிறந்த வீரராயிருந்தமையின் நெடுமுடி வேந்தர்களாய சேர பாண்டிய சோழர் இவர்களைப் போர்த் துணை கொண்டிருந்தனர். ”குவியற்கண்ணி மழவர் மெய்ம்மறை”[1] வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை”3 எனவரும் பதிற்றுப்பத்தால் இமய வரம்பன்றம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனும்4 ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும்5 மழவர்களைப் படைத் துணைகொண்ட செய்தி நன்கறியப் பெறும்.

இனி இவர்களுள் பெரும்பகுதியார் குதிரைப்படைஞராகவும் யானை வீரராகவும் இருந்துள்ளனரென்பது “உருவக் குதிரைமழவரோட்டிய”6 எனவும், “மைபடு நெடுந்தோள் மழவ ரோட்டியிடைப்புலத் தொழிந்த வேந்து கோட்டி யானை”7 எனவும் போதரும் சங்கத்துச் சான்றோர் பாடல் களால் இனிது


  1. “மழவர் மெய்ம்மறை“ என்று சேரனைப்புகழும் பதிற்றுப் பத்து அடிகளால் மழநாடு சேர நாட்டின் உட்பிரிவுகளிலும் ஒன்றாயிருந்ததென்பது புலனாகின்றது. மழவர்பெருமானாகிய அதிகமான் நெடுமானஞ்சியினது தலைநகராகிய தகடூரும் அவனது குதிரை மலையும் அக்குடியிற்றோன்றிய குறுநிலமன்னனாகிய வல்வில்லோரியினது கொல்லிக் கூற்றமும் சேரநாட்டின் கீழ்ப்பகுதியிலுள்ளமை எமது கொள்கையையே வலியுறுத்துகின்றது. அன்றியும், “பூவிரியும் பொழிற்சோலைக்காவிரியைக் கடந்திட்டழகமைந்த வார்சிலையின் மழகொங்கமடிப்படுத்தும்" என்ற வேள்விக்குடிச் செப்பேட்டிற்கண்ட அடிகளால் கொங்குநாட்டின் ஒரு பகுதியும் மழவர்க்குரித்தா யிருந்ததென்பது வெளியாகின்றது.