உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்ச்சியில் 7 “இந்த ஆண்டிலிருந்தே அதாவது 2003-2004லேயே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும், எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் அறிவியல் தமிழ் என்னும் பாடத்தைக் கற்பிக்க ஆணை பிறப்பித்துள்ளேன் என்பதை சுதந்திர திருநாளில் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக" குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் படிப்படியாகச் செய்யப்படும் என்று முதலில் கூறி, அரசாணையையும் பிறப்பித்து விட்டு, அதே முதலமைச்சர் இந்தக் கல்வி ஆண்டிலேயே எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அறிவியல் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்க ஆணை பிறப்பித்துள்ளேன் என்று கூறியது, வானத்தை வில்லாக சொல்லியிருக்கிறேன் என்ற உத்தரவுக்கு விளங்கக்கூடியதல்லவா? வளைக்கச் உவமையாக இந்த ஜெயலலிதா அரசு ஏப்ரலில் பிறப்பித்த அரசாணையின் 3வது 3வது பாராவில் மேலும் ஒரு பாடம் சேர்ப்பதால் இளம்சிறார்களுக்கு பாடச்சுமை கூடுதலாக்கப்படக் கூடாது என்பதற்காகவும், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களும் அதனைக் கற்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்து அறிக்கை தர ஒரு குழு அமைக்கப்படுகிறது என்று அறிவித்து, அந்தக் குழுவின் தலைவரையும், உறுப்பினர்கள் பெயரையும் குறிப்பிட்டுள்ளது. குழுவின் தலைவராக முனைவர் பொன்னவைக்கோ, துணை வேந்தர், தமிழ் வேந்தர், தமிழ் இணையப் பல்கலைக் கழகம், சென்னை என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.